அழகு நிறைந்த சுருட்டை முடியைப் பராமரிப்பது எப்படி?

Hair care tips
How to care for hair?
Published on

சுருள்முடி தனித்துவமானது; அழகானது மற்றும் ஆளுமை நிறைந்தது. ஆனால் அதற்கு சரியான பராமரிப்பும் கவனமும் தேவை. சுருட்டை முடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அதனை பராமரிப்பது சற்று கடினமான செயல். சுருட்டை முடி இருப்பவர்கள் மற்றவர்களைவிட தனித்து தெரிவார்கள். சுருள் சுருளாக கட்டுக்கடங்காமல் இருப்பதால் இதை பராமரிக்க கூடுதல் கவனம் தேவை. இவை இயற்கையாகவே வறண்டதாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கும். எனவே பராமரிப்பில் அதிக கவனம் தேவை.

சரியான ஹேர் கேர் பொருட்களை தேர்வு செய்வதன் மூலம் இயற்கையாகவே இருக்கும் சுருள்களை பாதிக்காமல் அழகாக பாதுகாக்க முடியும். சுருட்டை முடிக்கென்றே பிரத்தியேகமான ஈரப்பதம் அளிக்கும் கிரீம் அல்லது ஹேர் மாஸ்க்குகள் கிடைக்கின்றன. ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய்,  கிளிசரின் போன்ற கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கும் பல விதமான பொருட்கள் உள்ளன. இவற்றை உபயோகிப்பதன் மூலம் முடி வறண்டு போகாமல் காக்க முடியும்.

அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்தி முடியை சுத்தம் செய்வது அவசியம். கற்றாழை, ஷியா பட்டர் உள்ளிட்ட மைல்டான ஷாம்பு வகைகள் கிடைக்கின்றன. இவை சுருள் முடியை சுத்தப்படுத்துவதுடன் முடி வறண்டு போகாமல் ஈரப்பதத்தையும் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.

சுருள் முடிக்கு சாதாரண முடியைவிட கண்டிஷனர் அதிகம் தேவைப்படும். கண்டிஷனரை பயன்படுத்துவதற்கு முன்பு முடியில் சிக்குகளை நீக்கி விட்டால் கண்டிஷனரை எளிதாக அப்ளை செய்ய முடியும். அவற்றை நேரடியாக உள்ளங்கையில் விட்டு கூந்தலில் தடவி அலசலாம். ஆனால் முடியை வறட்சியாக்கும் சல்பேட், பாராபென் உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லாத கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். ஈரப்பதமூட்டும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்: ஒரு பறவைகளின் புகலிடம்!
Hair care tips

சுருள் முடிக்கு பலவிதமான ஜெல் பொருட்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. லைட்வெயிட் கர்லிங் ஜெல்களை வாங்கி ஹேர் வாஷ் செய்யும் பொழுதெல்லாம் பயன்படுத்தலாம். இது கேசத்திற்கு அதிக ஹைட்ரேஷன் வழங்கி ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்.

சுருட்டை முடிகள் ஈரமாக இருக்கும்போது மட்டும் சீவுவது எளிது. உலர்ந்த சுருட்டை முடிகளை சீவுவது முடிச்சுகளை உருவாக்கும். எனவே சுருட்டை வடிவத்தை பராமரிக்க சற்று ஈரமாக இருக்கும் பொழுதே சீவுவது சிக்கலாகாமல் இருக்க உதவும். அகன்ற பல் கொண்ட சீப்பு அல்லது விரல்களை கொண்டு சிக்குகளை நீக்கலாம்.

சுருட்டை முடியை தினமும் அலசவேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி நீரில் அலசுவது முடியை வறண்டு போகச் செய்வதுடன் பராமரிப்பதும் கடினமாகும்.

புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும், பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதும் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

முட்டை மற்றும் கொட்டைகளில் உள்ள பயோட்டின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான முடியை வளர்க்க உதவும்.

தூங்கும்பொழுது மைக்ரோஃபைபர் துண்டு அல்லது சாட்டின் தலையணை உறையில் தூங்கலாம் அல்லது தலைமுடியை சாட்டின் ஸ்கார்ஃப்பில் சுற்றிக் கொள்ளலாம். இது உராய்வை குறைத்து, ஈரப்பதத்தை தக்கவைத்து சுருட்டை முடிகளை பாதுகாக்கிறது.

ஏழு எட்டு வாரங்களுக்கு ஒருமுறை பிளவுபட்ட முனைகளை வெட்டுவது சுருட்டை முடியின் வடிவத்தை பராமரிக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com