வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்: ஒரு பறவைகளின் புகலிடம்!

Payanam articles
Vedanthangal Bird Sanctuary
Published on

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மதுராந்தகம் தாலுகா வேடந்தாங்கல் கிராமத்தில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பறவைகள் வருகின்றன. இந்த இடத்தில் கனடா சைபீரியா பங்களாதேஷு பர்மா ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலத்தில் இங்கு பறவைகள் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

இந்த இடம் செங்கல்பட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தியாவின் உள்ள மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகட்டி வாழ்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளில் டார்டர் பிளமிங்கோ பறவையினங்கள் அதிக அளவில் வருகிறது.

இங்கு வரும் பறவை இனங்களில் மாற்றங்களை மற்றும் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து பார்வையிடலாம்.

இதனை பார்வையிட சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆகும். இந்த சரணாலயத்திற்கு காஞ்சிபுரம் மகாபலிபுரம் போன்ற இடங்களில் இருந்தும் செல்லலாம்.

இது 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2022 ல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த இடங்களை சுற்றி பார்ப்பதால் மனதுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். பல்வேறு நாட்டில் இருந்து வரும் பறவைகளுக்கு இந்த சரணாலயம் ஒரு புகலிடமாக உள்ளது.

முதன் முதலில் 1798ல் ஆங்கிலேயர்களால் இந்த சரணாலயம் நிறுவப்பட்டது. சில பறவைகள் உயரமாகவும் சில பறவைகள் தாழ்வாகவும் பறக்கும் தன்மைகொண்டது. இதனை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இங்கு சுமார் 4000 முதல் 40 ஆயிரம் வரை பறவைகள் வந்து செல்கின்றன.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் நாணயம்: நேர்மையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம்!
Payanam articles

மேலும் இங்கு கார்கினை நீல இறகு பறவைகள் பாம்பு பறவைகள் பெயிண்ட் நாரைகள் மண்வெட்டி பறவைகள் இது போன்ற எண்ணற்ற பறவைகள் இங்கு வருகை தருகிறது.

இந்த காட்டுப்பகுதியில் பறவைகள் தவிர அதிக அளவில் குரங்குகள் காணப்படுகிறது. குரங்குகளின் தாயகமாக இந்த இடம் விளங்குகிறது. உங்கள் பயணத்தின் மறக்கமுடியாத இடமாக இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு வரும் பறவை இனங்கள் இரவு நேரத்தில்தான் அதிகமாக வருகின்றன என இங்குள்ள வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். பிரபல சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை சுற்றி பார்க்க வருகின்றனர்.

நவம்பர் முதல் பறவைகளின் இனப்பெருக்க காலமாகும். சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்கிறது. டிசம்பர் ஜனவரி மாதம் வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மே மாதத்தில் பறவைகள் குறைவாக காணப்படும். வேடந்தாங்கல் சுமார் 86 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த ஏரியில் சுமார் 16 அடி வரை ஆழம் உள்ளது. மேலும் கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது வெள்ளை அரிவாள் நத்தை குதிரை ஆம்பல் நாரை புள்ளி மூக்கு வாத்து கரண்டி வாயன் போன்ற இருபதுக்கு மேற்பட்ட பறவை இனங்கள் புதிதாக வந்துள்ளது. அடர்ந்த மரங்கள் உள்ள காட்டுப் பகுதியாகும். 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பறவை இனங்கள் இங்கு வந்து செல்கிறது. முற்காலத்தில் வேடர்கள் இங்கு உள்ள பறவைகளை வேட்டையாடி வந்ததால் வேடந்தாங்கல் என்ற பெயர் வந்தது.

இதையும் படியுங்கள்:
விவேகத்துடன் வாழ்வோம் வான் வரை உயர்வோம்!
Payanam articles

அதன் பின்னர் இங்குள்ள மக்கள் இந்த பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்க தொடங்கினார்கள். 1961 முதல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நீர்க்கடம்பு மரங்கள் அதிகமாக உள்ளதால் பறவைகள் விரும்பி வருகிறது. காரணம் இந்த நீர் கடம்பு மரங்கள் தண்ணீரில் உள்ள மாசுகளை சுத்தப்படுத்தும் தன்மை உடையது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் எண்ணற்ற பறவைகள் இந்த வேடந்தாங்கலுக்கு படையெடுத்து வருகின்றன.

இந்த சரணாலயத்தை சுற்றி பார்ப்பது என்பது மனதிற்கு உற்சாகத்தையும் உணர்ச்சியையும் தரும். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com