முக வடிவத்துக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் தேர்ந்தெடுப்பது எப்படி?

Hair Image
Hair Imagepixabay.com

பெண்களுக்கு பொதுவான ஒரு பிரச்னை உண்டு. அது என்னவென்றால், முடி வெட்டியபிறகு நீளமான முடிவுக்கு ஆசைப்படுவதும்,  நீளமான முடி வைத்திருக்கும்போது குறைந்த அளவு முடிக்கு ஆசைப்படுவதும்தான். சரி, அந்தப் பிரச்னையை விடுங்க!  நம்முடைய முகத்துக்கு எந்த வகையான ஹேர் கட் செய்வது என்ற குழப்பம் அடையும் பெண்களே! இந்தப் பதிவு உங்களுக்குத்தான்! முதல்ல, உங்கள் முக வடிவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சில சமயம் நமது தலைமுடியின் அடர்த்தியைப் பொருத்து வடிவம் மாறும். ஆனால், முடி வெட்டப்போகும் சமயத்தில் உங்கள் முகம் எந்த வடிவத்தில் காணப்படுகிறதோ அதைப்பொருத்து ஹேர் கட்-டை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

வட்டமான முகம்:

ட்டமான முகம் கொண்டவர்கள் நீளமான முடி வைத்துக்கொண்டால் அழகாக இருக்கும். மேலும், முன் பக்கம் மெலிதாகவும் சிறியதாகவும் (short Bang) வெட்டிக்கொள்ளலாம்.

சுருள் முடிகள், முன்பக்கம் அடர்த்தியான ஷார்ட் ஹேர் (thick bang)வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சதுரமான முக வடிவம்:

ந்த முக வடிவம் கொண்டவர்கள் தோள் வரை இருக்கும் ஹேர் கட் செய்துக்கொள்வது அழகாக இருக்கும். அந்த குறைவான முடி அளவிலேயே (short haircut) இருப்பக்கமும் ஸ்டெப் கட் செய்துகொள்ளலாம். இதனால் முடியானது காதோரம் வந்து அழகான தோற்றத்தைத் தரும்.

நீளமான முக வடிவம்:

முகம் நீளமாக இருப்பதால், தோள்பட்டையானது சற்று கீழிறங்கி இருக்கும். ஆகையால் தோள்களுக்கு சற்று மேல் வரை ஹேர் கட் செய்துக்கொண்டால் அழகான லுக்கைத் தரும். முன்பக்கம் நெற்றி வரை Bang கட் செய்வதால் நீளமான முகம் சற்று குறைவாகத் தெரியும். மேலும், ஷார்ட் ஹேருடன் சுருள் செய்தால் இன்னும் அழகாக இருக்கும்.

Hair Image
Hair Imagepixabay.com

ஓவல் வடிவம்:

ந்த வகையான முக வடிவம் கொண்டவர்களுக்கு எந்த வகை ஹேர் கட் செய்தாலும் பொருத்தமானதாக இருக்கும். ஓவல் வடிவம்கொண்ட உங்கள் நண்பருக்கு மிகவும் அழகான ஒரு ஹேர் கட் பரிந்துரைக்க வேண்டும் என்றால், நீளமான லேயர் கட்டை தேர்ந்தெடுத்து தைரியமாக சிபாரிசு செய்யலாம்.

ஹார்ட் வடிவம்:

ஹார்ட் முக வடிவம் கொண்ட பலருக்கும் அகலமான நெற்றி இருக்கும் என்பதால் முன்நெற்றியில் லேயர் பேங் (layer bang) வைப்பது அழகாக இருக்கும். தோள் வரை ஹேர் கட் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உடம்பை சுறுசுறுப்பாக்கும் பூண்டு - மிளகு சூப்!
Hair Image

குறிப்பு: நமது முக வடிவமானது வட்டம், சதுரம், ஓவல், நீளம், ஹார்ட் ஆகிய வடிவங்களில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். அனைத்து வகை முக வடிவங்களுக்கும் Bob cut (கழுத்து வரை கட் செய்யப்படும் ஒரு ஹேர் ஸ்டைல்) பொருத்தமானதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com