உடம்பை சுறுசுறுப்பாக்கும் பூண்டு - மிளகு சூப்!

Garlic-pepper soup
Garlic-pepper soup
Published on

ழையோ வெயிலோ சத்தான சரிவிகித உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் நம்மை பெரிதும் பாதிக்காது. மழைக்காலத்துக்கு உகந்த மிளகு பூண்டு சூப், தூதுவளை சூப் போன்ற சூப்களை தினம் ஒன்றாக குடித்து வர பசி எடுப்பதுடன், சளி இருமலையும் போக்கும். சூப் என்பது ஜலதோஷத்திற்கு நல்லது என கருதப்படுவதற்கு காரணம் இது ஒரு எளிய உணவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருட்களை கொண்டு செய்யப்படுவதாகவும் உள்ளது என்பதால்தான். இந்த சூப் வகைகள் ஊட்டமளிப்பதுடன் ஜீரணிக்கவும் எளிதானது. ருசியும் நன்றாக இருக்கும்.

பூண்டு மிளகு சூப்:

மிளகு ஒரு ஸ்பூன் 

பூண்டு 10 

உப்பு  தேவையானது

வெண்ணெய் 1 ஸ்பூன்

சோள மாவு 2 ஸ்பூன்

கார்ன் ஃபேளக்ஸ் சிறிது

மழைக்கு இதமா, தொண்டைக்கு சுகமா இருக்கிற இந்த மிளகு பூண்டு சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு பதில் பழரசம் குடித்தால் போதுமா?
Garlic-pepper soup

மிளகை கொரகொரப்பாக பொடிக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். வாணலியில் 1/2 ஸ்பூன் வெண்ணெய் போட்டு பொடித்த மிளகு பூண்டை சேர்த்து இரண்டு கிளறு கிளறி 4 கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். சோளமாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கும் சூப்பில் விட்டு கிளறி 1/2 ஸ்பூன்  சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். இப்பொழுது மேலாக அரை ஸ்பூன் வெண்ணெய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது சேர்த்து cornflakes கொஞ்சமாக தூவி பரிமாற தொண்டைக்கு மிகவும் இதமான சூப் தயார். ஜலதோஷமும், உடம்பு வலியும், தும்மலும், இருமலும் ஓடிப் போய் உடம்பு கலகலப்பாகி விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com