
நாம் உடல் அழகை பராமரிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவோம். அதிலும் குறிப்பாக ஆண்களைவிட பெண்கள்தான் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து ரசித்து ரசித்து செயல்படுவார்கள். தலைமுடி முதல் செருப்பு வரை எல்லாமே அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நிச்சயமாக பெண்கள்தான் அதில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது.
அதிலும் விரல்களில் அணியும் மோதிரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவரவர் ரசனைக்கு ஏற்ப கடைகளில் ஆர்டர் கொடுத்து வாங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மோதிரத்தை எப்படி தேர்வு செய்யவேண்டும் எப்படி இருந்தால் அது நல்லது என்பதை பற்றிய புரிதல் எல்லாம் நமக்கு கொஞ்சம் குறைவுதான். அந்த புரிதலை போக்குவதற்காகத்தான் இப்பதிவு.
ஒரு மோதிரத்தை தேர்வு செய்வதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்ற ஆச்சரியம் உங்களுக்கு எழலாம். பெண்கள் விரும்பி அணியும் மோதிரங்களை பொதுவாக 3வகையாக பிரிக்கலாம். அவை இனிஷியல், சிக்நட், எம்ப்ளம் ரிங்.
இனிஷியல் மோதிரங்களில் எழுத்துக்கள் வடிவில் கற்கள் பதிக்கப்படும். சிக்நட் மோதிரங்களில் ரத்னக்கற்கள் பதிக்கப்படுவதில்லை. இதன் மேல் பகுதியில் எழுத்துக்கள் சேர்ந்த ஒரு முத்திரை காணப்படும். எம்ப்ளம் ரிங் வகை மோதிரங்கள் தனி வகையைச் சேர்ந்தவை. பழைய காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் அணிந்திருக்கும் மோதிரங்களைப் பார்த்து அவர்களின் பதவி என்ன? என்பதைக் கண்டு அறிந்துவிட முடியும். முற்காலத்தில் பதவிகளின் அடிப்படையில் அணியப்பட்ட மோதிரங்கள் தற்காலத்தில் அன்பின் அடையாளமாக அணியப்படுகின்றன.
பெண்களில் பெரும்பாலானோர் கற்கள் பதித்த மோதிரத்தையே விரும்பி அணிகிறார்கள். இருந்தாலும் திருமண நிச்சயதார்த்த மோதிரங்களுக்கென்று தனி மவுசு உண்டு. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிச்சயதார்த்த மோதிர மரபு நீடித்து வருகிறது.
பெண்களை கவரும் அளவுக்கு தற்போது ஏராளமான மாடல்களில் மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெண்களின் உடல்வாகுக்கும், நிறத்துக்கும் தகுந்தபடி மோதிரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக வேலைப்பாடு நிறைந்த மோதிரங்களை வாங்குவதை விட கெட்டியான மோதிரங்களை வாங்கி அணிவதே சிறந்தது.
மேற்கண்ட குறிப்புகளை நீங்கள் படித்திருப்பீர்கள் அப்படி என்றால் இனிமேல் நீங்கள் மோதிரத்தை தேர்வு செய்யும்பொழுது இதில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை கடைபிடித்து வாங்குங்கள்.