
பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆபரணங்களில் நிச்சயமாக ஜிமிக்கி கம்மல் இடம் பிடித்திருக்கும். கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்திய பகுதிகளில் இந்த வகை காதணிகள் மிகவும் புகழ்பெற்றதாகும். அதிலும் Dome வடிவத்திலான ஜிமிக்கி கம்மல் கேரளாவில் மிகவும் பிரபலமாகும். ஜிமிக்கி கம்மல் தங்கம் மற்றும் Imitation நகைகளில் கிடைக்கிறது.
பெண்கள் தங்கள் பட்ஜெட்கு ஏற்றவாறு அதை வாங்கி அணிந்து தங்கள் ஃபேஷன் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். தற்போது ஜிமிக்கி கம்மலில் நிறைய வகைகள் வந்துவிட்டன. கல் பதித்த கம்மல், முத்து பதித்த கம்மல், Temple inspired design என்று விதவிதமாக இருப்பதால், எதை வாங்குவது? எந்த கம்மல் நமக்கு எடுப்பாக இருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அதைப்பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நம்முடைய முகத்தின் வடிவத்திற்கு ஏற்றார்ப்போல காதணிகளை அணியும் போது அது நமக்கு எடுப்பாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் தெரியும். நம்முடைய முகத்தின் அமைப்பை Round face, oval face, square face, Heart face என்று பிரிக்கலாம்.
பொதுவாக ஜிமிக்கி கம்மல் ஓவல் மற்றும் உருண்டை முகத்திற்கு மிகவும் அழகாக பொருந்தும். இதை அணிவதால் இவர்கள் நேர்த்தியாக மற்றும் அழகாக தெரிவார்கள்.
ஓவல் முக அமைப்பைக் கொண்டவர்கள் சிறியது முதல் பெரிய அளவிலான ஜிமிக்கி கம்மலை தாராளமாக பயன்படுத்தலாம்.
உருண்டையான முகத்தைக் கொண்டவர்கள் ஜிமிக்கி கம்மலை அணியும் போது அது அவர்களுக்கு முகத்தை சற்றே நீளவாக்காக காட்டி அவர்களுக்கு Balanced lookஐ கொடுக்கும்.
இதய வடிவ முக அமைப்பைக் கொண்டவர்கள் நீளமாக உள்ள ஜிமிக்கி கம்மலை அணியலாம்.
முடி குறைவாக உள்ளவர்கள் Bold ஆன பெரிதாக இருக்கும் ஜிமிக்கி கம்மலை அணியலாம். அது அவர்களுக்கு எடுப்பாக இருக்கும்.
முடி நீளமாக உள்ளவர்கள் சிம்பிள் டிசைனில் உள்ள ஜிமிக்கியை அணியலாம்.
தினமும் ஜிமிக்கி கம்மல் அணிய விரும்புகிறவர்கள் Light weight மற்றும் சிறிய அளவிலான கம்மலை தேர்வு செய்வது சிறந்தது.
ஏதேனும் பண்டிகைக் காலத்தில் பெரிய ஜிமிக்கி கம்மலை தேர்ந்தெடுத்து அணியும் போது பார்ப்பதற்கு கண்ணை கவர்வதாக இருக்கும்.
பெண்கள் ஜிமிக்கி கம்மலை அணிவதற்கு வயது வரம்பு தேவையில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக தனக்கு பிடித்த டிசைனை தேர்வு செய்து அணியலாம். அது அவர்களுக்கு பிடித்ததாகவும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கக்கூடியதாகவும் இருந்தால் போதுமானது.
பெண்களின் தன்னம்பிக்கையோடு சேர்ந்து ஜொலிக்கும் எந்த தங்க நகையும் அவர்களின் அழகைக் கூட்டும் என்பதில் ஐயமில்லை.