உங்களுக்கு ஏற்ற வாசனைத் திரவியத்தை தேர்ந்தெடுப்பது எப்படி தெரியுமா?

Perfumes
Perfumes
Published on

சந்தையில் எண்ணற்ற வாசனைத் திரவியங்கள் விற்பனையாகி வருகின்றன. இதனை வாங்குவதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். இருப்பினும் நமக்கு எந்த வாசனைத் திரவியம் ஏற்றதாக இருக்கும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்க உதவுகிறது இந்தப் பதிவு.

இன்றைய இளைஞர்கள் பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்வதற்கு அதிக நேரத்தையும், பணத்தையும் செலவிடுகின்றனர். இதில் வாசனைத் திரவியங்களுக்கு என்று தனியிடம் உண்டு. பொதுவாக வியர்வை நாற்றத்தைப் போக்கவே சிலர் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் வெளியில் செல்லும் போதெல்லாம் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை சிலர் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். வெகுசிலரோ கோடை காலங்களில் மட்டும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்‌.

நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நறுமணம் அளிக்கக் கூடிய வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுப்பதில் பலரும் அக்கறை காட்டுவதில்லை. சந்தையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை வாங்கி விடுகின்றனர். இனி அந்தக் தவறை செய்யாதீர்கள். உங்களுக்கு ஏற்ற வாசனைத் திரவியங்கள் எது என்பதை நன்கு அலசி ஆராய்ந்து முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

முதலில் உங்களுக்கு மிகவும் பிடித்த மலர் அல்லது எண்ணெயில் உள்ள வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுங்கள். தனித்துவமான வாசனை வேண்டுமெனில், ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களில் செய்யப்பட்ட வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்ததாக, நீங்கள் தேர்ந்தெடுத்த வாசனைத் திரவியத்தில் என்னென்ன கலந்திருக்கின்றன என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரையில், கெமிக்கல்ஸ் இல்லாத இயற்கை பொருட்கள் இருக்கும் வாசனைத் திரவியங்கள் நல்லது.

செல்லும் இடத்திற்கு ஏற்பவும் வாசனைத் திரவியத்தை தேர்ந்தெடுக்கலாம். சுற்றுலாவிற்கு சென்றால் மலர் வாசனை கொண்டதையும், இரவு பார்ட்டிக்குச் சென்றால் மஸ்கி வாசனைத் திரவியத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

எப்போதும் ஒரே பிராண்டைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து, பல பிராண்டுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது அதன் அளவு, வாசனை, விலை மற்றும் கெமிக்கல்ஸ் ஆகியவை வேறுபட்டிருக்கும். இதனை வைத்து ஒவ்வொன்றிற்கும் இடையையுள்ள வித்தியாசத்தை நம்மால் ஓரளவு நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
தாடி வளர்ச்சிக்கு சிறந்தது எது? இத கவனியுங்க ப்ரோ!
Perfumes

வாசனைத் திரவியங்களில் EDP மற்றும் EDT ஆகியவற்றை சரிபார்த்து வாங்குவதும் நல்லது. இதில்  EDP (Eau de Parfum) என்றால் மிகவும் வலிமையான மற்றும் தூய்மையான வாசனைத் திரவியம். இது நீண்ட நேரத்திற்கு வாசனையைத் தக்க வைக்கும். EDT (Eau de Toilette) என்றால் செறிவு குறைவான வாசனைத் திரவியம். இது குறைந்த நேரத்திற்கே வாசனையைத் தக்க வைக்கும். 

உங்களுக்கு ஏற்ற சரியான வாசனைத் திரவியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது தன்னம்பிக்கையும், மனநிலையும் உயரும். உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள இவை உதவுகின்றன. மிகவும் முக்கியமாக சரியான வாசனைத் திரவியம் உங்களை மிகவும் ஸ்டைலாக மாற்றவும் செய்கிறது. வாசனைத் திரவியங்கள் மற்றவர்களை ஈர்ப்பதற்கு மட்டுமின்றி, உங்களின் ஆளுமையை மேம்படுத்த புது நம்பிக்கையை அளிக்கிறது.

வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்த மிகச் சிறந்த இடம் மணிக்கட்டு தான். ஏனெனில் இப்பகுதி வெப்பமடைவதால், இயற்கையான நறுமணம் நீண்ட நேரத்திற்கு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com