உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

serum using girl
How to choose the right serum for your skin?

அழகான ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கு, பலரும் பல்வேறு விதமான சீரம்கள் பயன்படுத்துவது வழக்கம். முகத்தின் கருமை, முகப்பரு, சுருக்கங்கள் போன்றவற்றை சரி செய்யும் ஆற்றல்மிக்க பொருட்கள் சீரத்தில் உண்டு. ஆனால் சந்தையில் பல்வேறு விதமான சீரமங்கள் வருவதால், அதில் உங்கள் சரும வகைக்கு எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பது கடினமாகும். இந்த பதிவில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சீரம் எப்படி தேர்ந்தெடுப்பது? எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

நீங்கள் சீரம் வாங்க போகிறீர்கள் என்றால் முதலில் உங்கள் சருமத்தின் குறிப்பிட்ட பிரச்சனை என்ன என்பதில் கவனம் செலுத்துங்கள். அதாவது உங்கள் சரும வகையை முதலில் கண்டறியவும். வறண்ட சருமமா? எண்ணெய் பசை அதிகம் இருக்கக்கூடியதா? எல்லாம் கலந்ததா அல்லது சென்சிடிவ் சருமமா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் சருமம் தற்போது எப்படி இருக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பருக்கள் அதிகம் உள்ளதா? சுருக்கங்கள் உள்ளதா? கரும்புள்ளிகளை குறைக்க விரும்புகிறீர்களா? என்பதை முடிவு செய்யுங்கள். 

இந்த இரண்டையும் கண்டறிந்த பிறகு, சந்தையில் இத்தகைய பிரச்சனையை சரி செய்யும் சீரம் வகைகள் பற்றி தேடிப் பார்க்கவும்.

  • முகத்தை பிரகாசமாக்கும் விட்டமின் சி 

  • நீரேற்றத்திற்கு உதவும் ஹைலூரோனிக் அமிலம்

  • வயதான தோற்றத்தை தடுக்கும் ரெட்டினால் 

  • எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்தும் நியோசினமைட் 

இப்படி, உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கலவைகள் அடங்கிய சீரத்தை தேர்ந்தெடுக்கவும். சீரம் முதல் முறை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், கொஞ்சமாக பயன்படுத்தத் தொடங்குங்கள். பின்னர் அது உங்கள் சருமத்திற்கு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்ததும், அதை முறையாக தினசரி பயன்படுத்தத் தொடங்குங்கள். ஏதேனும் பாதிப்புகள் தென்பட்டால், உடனடியாக சீரம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். 

இதையும் படியுங்கள்:
எந்த வயதில் சர்க்கரை வியாதி வர வாய்ப்புகள் அதிகம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
serum using girl

சரியான சீரம் உங்கள் நிறத்தின் தோற்றத்தையும் தன்மையையும் உண்மையிலேயே மாற்றும். எனவே உங்கள் தனிப்பட்ட சரும வகையைப் புரிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவது தவறில்லை. இதன் மூலமாக சரியான சீரத்தை தேர்ந்தெடுத்து, அதன் முழு பலன்களையும் நீங்கள் அடைய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com