எந்த வயதில் சர்க்கரை வியாதி வர வாய்ப்புகள் அதிகம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Diabetes Patient
Diabetes
Published on

நமக்கு வயதாக வயதாக நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. வாழ்க்கையில் எந்த கட்டத்திலும் நீரிழிவு நோய் வரலாம் என்றாலும், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இது பற்றிய புரிதலை நாம் ஏற்படுத்திக் கொள்வது மூலமாக, ஆரம்பக் கட்டத்திலேயே நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். 

எந்த வயதில் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்? 

பின்வரும் வயது வரம்புகளின் அடிப்படையில் நீரிழிவு நோய் அதிகம் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 

45 - 50 வயது: இந்த வயதில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக இன்சுலின் எதிர்ப்பு, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறை மற்றும் படிப்படியாக எடை அதிகரிப்பது போன்ற காரணங்களால், இதன் அபாயம் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர். 

55 - 64 வயது: இந்த வயதில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 55 - 64 வயதுக்கு உட்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் வருகிறதாம். எனவே இந்த வயதில் இருப்பவர்கள் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது. 

65 வயதுக்கு மேல்:  நீரிழிவு நோய் முதியவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நான்கில் ஒரு நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வயது அதிகமாவதால் உடல் அமைப்பில் மாற்றம் மற்றும் உடல் செயல்பாடுகள் குறைவதால் இந்த ஆபத்து அதிகரிக்கிறது. 

ஏன் வயதாக வயதாக நீரிழிவு ஆபத்து அதிகம்? 

நமக்கு வயதாகும் போது நம் உடலில் பல்வேறு உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இச்சமயத்தில் இன்சுலினை முறையாக பயன்படுத்தும் உடலின் திறன் குறைகிறது. மேலும் வயதானவர்களுக்கு உடலின் தசை குறைந்து கொழுப்பின் அளவு அதிகரிப்பதால், இன்சுலின் எதிர்ப்பு பாதிப்பு ஏற்படலாம். 

பல வயதானவர்களால் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்பட முடிவதில்லை. இது எடை அதிகரிப்புக்கு வழி வகுத்து நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இருதய நோய் போன்ற நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாகவே இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Diabetes Patient

நீரிழிவு நோய்க்கு வயது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தாலும், இளைய வயதில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை வியாதி வரலாம். குறிப்பாக அதிக எடை கொண்டவர்களுக்கு மற்றும் சர்க்கரை நோய் குடும்ப வரலாறு கொண்டவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே 30 வயதுக்கு மேல் வழக்கமான உடல் பரிசோதனைகள் செய்து, ஆரோக்கியத்தை பராமரிக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com