
நமது கை, கால்களில் உள்ள நகங்கள் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நகங்களின் வழியாக கூட பல நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சுகாதாரமற்ற நகங்களில் இருந்து நோய் தொற்றுகள் பரவுகின்றன. அதனால்தான் குழந்தைகளைகூட வாயில் விரல்களை வைக்காதீர்கள்? என்று கூறுகிறோம். அவ்வப்போது நகங்களை வெட்டி விரல்களை சுத்தமாக வைக்கவேண்டும். நகங்களை வளர்க்க விரும்புவர்கள் அழகாக வைத்துக்கொள்ள பராமரிப்பு முறைகளை முறையாக கையாளவேண்டும்.
கை நகங்கள் அதிகமாக ஈரமாக இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் நகங்கள் உலர்ந்ததாகவும் சுத்தமாகவும் இருக்கும்போது அது உறுதியாக இருக்கும். அழகாக நகம் வளர்த்து விட்டு பின்னர் அது உடையும் போது வருத்தமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்ய வேண்டி வந்தால் கைகளில் கிளவுஸ் பயன்படுத்தலாம்.
நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளும்போது பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் இருக்கும். நகங்களில் உள்ள அழுக்குகளில் பாக்டீரியா இருந்தால் அவை தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடும். நகம் வளர்க்க ஆசைப்பட்டால் அதனை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
நகங்களுக்கு மாய்ஸ்ரைசர்
நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது வறட்சி ஏற்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் வறட்சி ஆனது நகங்களையும் பாதிக்கும். உங்கள் நகங்களை சுற்றியுள்ள பகுதியை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவு பழக்கம் மேற்கொள்ள வேண்டும். தினசரி உடலுக்குத் தேவையான அளவு நீரை அருந்தவேண்டும்.
உங்கள் கைகள் வறண்டு இருக்கும்போது அவற்றை ஈரப்பதமாக வைக்க மாய்சரைசர் போன்றவற்றை பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிரீம் அல்லது லோஷன் ஹைட்ராக்சி அமிலம் நிறைந்ததாக இருப்பது நல்லது.
நகங்கள் பாதுகாப்பு
நாங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நெயில் பாலிஷ் போட்டிருந்தாலும் போடாமல் இருந்தாலும் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கூடிய கோட்டின் பயன்படுத்தலாம் நாங்களே பலப்படுத்துவதற்கு பிரத்யேகமாக ஹைலுரோனிக் அமிலம் கொண்ட கோட்டிங் கடைகளில் கிடைக்கும். இது நகத்திற்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும். நகங்களை அடிக்கடி கடிக்கக் கூடாது. இது நோய் தொற்றுகளை ஏற்படுத்தும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது
* பார்லர் சென்று நகங்களை அழகுபடுத்த சுத்தம் செய்ய செல்லும்போது அங்கு இருக்கும் பொருட்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமாக இருக்கிறதா? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நகம் வெட்டி கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
* உங்கள் கைகளில் காயங்கள் ஏதேனும் இருந்தால் அதனை கவனமாக கையாண்டு அந்த நேரத்தில் ரசாயனம் கலந்த பொருட்கள் அல்லது நகம் வெட்டுதல் போன்றவற்றை தவிருங்கள்.
* செயற்கை நகங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயற்கையான முறையில் தயாரித்த நெயில் பாலீஷ் பயன்படுத்துங்கள்.
* நெயில் பாலிஷ் ரிமூவ் செய்யும்போது பிளேடு, கத்தி பயன்படுத்தாமல் ரிமூவர் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
* நகங்களில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்கள், உடைவது, விரிசல், வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடல் நலப்பிரச்னைகளின் அறிகுறிகள் ஆகும்.
கை, கால் நகங்களை சீராக பராமரித்தால் நகங்கள் ஆரோக்கியமாக வலுவாக இருக்கும்.