
தற்போது உள்ள காலக்கட்டத்தில் என்ன தான் உழைப்பு, திறமை நம்மிடம் இருந்தாலும் மற்றவர்கள் நம்மை பார்த்த உடனேயே இம்ப்ரஸ் ஆவதற்கு அழகு என்பது முக்கிய தேவையாக உள்ளது. 'ஆள் பதி ஆடை பாதி' என்பார்கள். நம்முடைய அழகை மேம்படுத்திக் கொள்வது நம் தன்னம்பிக்கையை பலமடங்கு அதிகரிக்கும். LooksMax என்பது நம்முடைய அழகை பலவழிகளில் மேம்படுத்தும் முறையாகும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒருவருடையை வெளிப்புற தோற்றத்தை அழகுப்படுத்த க்ரூமிங், உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கம், தூக்கம், ஆடைகளில் மாற்றம் செய்வதின் மூலம் தற்போது உள்ள தோற்றத்தைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக மாற முடியும். இதற்கு தொடர்ந்து ஸ்கின்கேர் ரொட்டினை கடைப்பிடித்து சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூக்கம் வேண்டும். நல்ல பிட்டான ஆடைகளை உடுத்த வேண்டும்.
1. Skincare and Grooming
முகத்தை கழுவுவதற்கு Cleanser பயன்படுத்துவது அவசியமாகும். இதனால் முகத்தில் உள்ள சிறு துவாரங்களில் (Pores) படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். வெளியில் செல்லும் போது கட்டாயம் சன் ஸ்கிரீன் (Sunscreen) பயன்படுத்துவது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
தினமும் சருமத்தில் மாய்ஸ்டரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும். தலைமுடியை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் அவ்வப்போது வெட்டி சீராக பராமரிப்பது உங்கள் முகத்தின் வடிவத்தை மேம்படுத்திக் காட்டும்.
2. Diet and Health
தினமும் நல்ல ஆரோக்கியமான சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், புரதம், கார்போஹைடரேட் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் சீரான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும். ஒருநாளைக்கு நம் உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்வது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல் உடல் சீராக இயங்கவும் உதவுகிறது. கண்டிப்பாக 8 மணி நேர தூக்கம் அவசியம். இதனால் நம் உடல் மற்றும் சருமம் புத்துணர்ச்சி பெறும்.
3. Fitness
உடலை வலிமைப்படுத்துவற்கான பயிற்சி மற்றும் கார்டியோ உடற்பயிற்சியை சேர்த்து செய்வதின் மூலமாக உடல் தசைகள் இறுக்கமாகி அழகான உடல் அமைப்பை பெறலாம். நாம் நடக்கும் போது கம்பீரமாக நடப்பது. அமரும் போது கூனி உட்காராமல் நேராக அமர்வது, தோள்பட்டையை உயர்த்தி தலையை நிமிர்த்தி அமர்வது போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஆளுமையான தோற்றத்தை பெற முடியும்.
4. Wardrobe and Style
தற்போது உள்ள ஃபேஷன் உடைகளில் கவனம் செலுத்தாமல் அதிக தரம் வாய்ந்த ஆடைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆடைகள் அணியும் போது நம் உடலுக்கு பொருத்தமாக பிட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக இறுக்கமான ஆடைகளை அணிவது அசௌகரியத்தை தரும். உங்களுக்கான Personal style ஐ உருவாக்குங்கள். ஆடைகள், அணிகலன்கள், பர்ப்யூம் என உங்களுக்கான தனி ஸ்டைலை உருவாக்கி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துங்கள்.
5.Oral Hygiene
பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பற்களின் இடுக்கில் இருக்கும் உணவுகளை சுத்தம் செய்தல், பற்களின் கறைகளை நீக்குதல், பற்களை வெண்மையாக வைத்துக் கொள்வது தன்னம்பிக்கையை அதிகரித்து உங்களை அடிக்கடி புன்னகைக்க தூண்டும்.
Looksmaxing ஐ சிறப்பாக செய்து முடிப்பதற்கு தொடர்ந்து இவற்றை செய்ய பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாம் வெளிப்புற தோற்றத்திற்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதைப்போலவே நம் மன ஆரோக்கியத்தையும் (Mental Health) மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் சிறப்பான தோற்றத்தை நிச்சயம் பெறலாம். முயற்சித்துப் பாருங்கள்.