ஃபேஸ் மாஸ்க்...
ஃபேஸ் மாஸ்க்...www.healthline.com

வீட்டிலேயே கோல்டன் ஃபேஸ் மாஸ்க் போட்டு தேவதை போல ஜொலிப்பது எப்படி?

திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும்போது முகம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து பியூட்டி பார்லரில் பேஷியல் மற்றும் இன்ன பிற சிகிச்சைகளை எடுத்துக் கொள்வார்கள்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அற்புதமாக கோல்டன் ஃபேஸ் மாஸ்க் தயாரித்து அழகாக ஜொலிக்க முடியும். முதலில் தலைமுடியை ஒரு ஷவர் கேப் கொண்டு நன்றாக கவர் செய்து கொள்ளவும். பேசியலின் முதல் படி சுத்தப்படுத்துவதுதான்.

1. முகத்தை கிளன்சிங் செய்யும் முறை;

வெறும் தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளவேண்டும். மென்மையான துவாலையால் ஈரத்தை ஒற்றி எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பசும்பால் இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதை முகத்தில் கீழிருந்து மேலாக எல்லா இடங்களிலும் தடவி (கண்கள் புருவங்கள் நீங்கலாக) மென்மையாக விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடங்கள் அதை உலர விட வேண்டும். ஒரு ஈரமான மென்மையான டவலால் அதை ஒற்றி எடுத்து விட வேண்டும். 

2. இயற்கையான ஸ்கிரப்பர்;

முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வது அவசியம். அதற்கு இயற்கையான ஸ்கிரப்பர் ஒன்றை தயார் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் சர்க்கரை தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலக்கவும். இந்தக் கலவையை விரல் நுனிகளால் எடுத்து முகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை எடுத்து செல்களை புத்துணர்வாக வைக்கும். முகத்தின் சருமத்தை பளபளப்பாக மாற்றும். 

3. ஆவி பிடித்தல்;

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர்  தண்ணீர் ஊற்றி அதில் 10, 15 வேப்பிலைகளை போட்டு நன்றாக காய்ச்சவும். பின்பு அதை இறக்கி முகத்தை ஒரு கெட்டியான டவல் அல்லது போர்வையால் மூடிக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அப்போது முகத்தில் இருக்கும் துளைகள் திறக்கப்படுகின்றன. ஐந்து நிமிடத்தில் முகம் எல்லாம் வேர்த்து விடும். டவலால் முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். இனி இயற்கையான  ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். 

ஆவி பிடித்தல்
ஆவி பிடித்தல்www.bbc.com

இயற்கையான ஃபேஸ் மாஸ்க்;

ஃபேஸ் மாஸ்க்; 1.

ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் கீழிருந்து மேலாக தடவ வேண்டும். 20 நிமிடங்கள் அதை உலர விட வேண்டும். பின்பு முகத்தை கழுவ வேண்டும். 

இதையும் படியுங்கள்:
மாவிலையிலிருக்கும் மகத்தான மருத்துவ குணங்கள்!
ஃபேஸ் மாஸ்க்...

ஃபேஸ் மாஸ்க் 2

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு ஒரு ஸ்பூன் தயிர் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் கீழிருந்து மேலாக தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். 

ஃபேஸ் மாஸ்க் 3.

ஆரஞ்சு ஜூஸ் இரண்டு ஸ்பூன், கேரட் ஜூஸ் ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் கால் ஸ்பூன் இவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதன் பின்பு முகம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் மின்னும். பின்னர் வழக்கமான மேக்கப் செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com