
முகம் பொலிவு பெற செயற்கையான கிரீம், சீரம் போன்ற கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும், விலையும் மலிவாக இருக்கும். அத்தகைய பலன்களை கொண்ட ஒன்றுதான் கடலை மாவு. கடைகளில் வெறும் 10 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த கடலைமாவு சருமத்திற்கு ஏகப்பட்ட நன்மைகளை தருகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பல ஆண்டுகளாக கடலை மாவை சருமப்பிரச்னையை போக்க, சரும அழகை மேம்படுத்த பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள புரதம் சருமத்தில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் Zincல் Anti inflammatory பண்புகள் இருக்கிறது.
1. முகப்பொலிவுக்கு செய்ய வேண்டியது
சிறிது கடலை மாவுடன் தயிர் மற்றும் சந்தனம் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவிவிடவேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.
2. கரும்புள்ளிகள் நீங்க
கடலைமாவு சிறிது, எழுமிச்சைப்பழ சாறு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து தண்ணீர் விட்டு குழைத்து பேஸ்ட் போல ஆக்கி அதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.
3. முகத்தில் உள்ள ஆக்னே நீங்க
கடலைமாவு சிறிது எடுத்துக்கொண்டு அத்துடன் வேப்பிலை பொடி சிறிதளவு சேர்த்து தேவையான அளவு ரோஸ் வாட்டர் விட்டு நன்றாக கலக்கிவிட்டு முகத்தில் தடவி பத்து நிமிடம் கழுவி எடுத்துவிட்டால், ஆக்னே போன்ற முகத்தில் ஏற்படும் சருமப்பிரச்னைகள் விரைவில் நீங்கிவிடும்.
4. முகச்சுருக்கம் நீங்க
கடலை மாவுடன் சிறிது தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கம், கோடுகள் நீங்கும். சருமத்தில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.
5. வறண்ட சருமத்தை போக்க
கடலை மாவுடன் சிறிது பால் அத்துடன் Almond Oil ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள வறட்சிகள் நீங்கி பொலிவான சருமத்தை பெறலாம்.
இந்த கடலை மாவு ஃபேஸ் பேக்குகளை வீட்டிலே ட்ரை பண்ணி சரும அழகை மேலும் மேம்படுத்துங்கள்.