பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும் முகத்தை பளபளப்பாக வைப்பதிலும் அதிக நாட்டம் காட்டுவர். ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. இவற்றை நீக்குவதில் சீரம் முக்கிய பங்கு வைக்கின்றன. அவற்றை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகளைத்தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்
1. மஞ்சள் சீரம்
முதலில் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் மஞ்சள் தூளைச் சேர்த்து கலந்து ஒரு கொள்கலனுக்கு மாற்றவேண்டும். பின் சருமத்தில் 15 நிமிடங்கள் வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவுடன் காணப்படும்
2. எலுமிச்சை சீரம்
சம அளவு எலுமிச்சை சாறை ரோஸ் வாட்டருடன் சேர்த்து இதனுடன் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்க்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் சேமித்து இரவு படுக்கைக்கு முன் கண் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் தடவ முகம் பளபளப்பாகும்.
3. கற்றாழை சீரம்
கற்றாழை ஜெல்லை மென்மையாகும் வரை நன்கு கலந்து பாதாம் எண்ணெயை சில துளிகளைச் சேர்க்கலாம். இந்த சீரத்தைக் கண்ணாடி கொள்கலனில் மாற்றி குளிர்ச்சிக்காக குளிர்சாதப் பெட்டியில் சேமிக்க வேண்டும். சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு, இதை சிறிய அளவு தடவ சருமம் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
4. தேன் + எலுமிச்சை சீரம்
சம அளவு தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றை கலந்து இதனுடன் அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகள் சேர்க்கவும். பின் இதனை கொள்கலனில் மாற்றி குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் சேமிக்க வேண்டும். இதை சருமத்தில் 10-15 நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பளபளப்புடன் இருக்கும்
5.கிரீன் டீ சீரம்
முதலில் ஒரு கப் க்ரீன் டீயைக் காய்ச்சி, குளிர்வித்து கற்றாழை ஜெல் அல்லது கிளிசரின் சேர்த்து கலக்கவும். இந்த சீரத்தை கொள்கலனில் மாற்றி, குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து காலை மற்றும் இரவு நேரங்களில் சருமத்தில் தடவ முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி சுத்தமாக இருக்கும்.