நாம் பலவகை பாயசம் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் வித்தியாசமாய் கோதுமையில் பாயசம் செய்திருக்க மாட்டோம். சில கோவில்களில் இது பிரசாத உணவாகும். அட்டகாசமான சுவையில் கோதுமை பாயசம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உடைத்தகோதுமை - 1 கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
முந்திரி - 10
திராட்சை - 1 ஸ்பூன்
வெல்லம் - 1 1/2 கப்
நெய் - 3 டீஸ்பூன்,
ஏலத்தூள் - 1ஸ்பூன்.
செய்முறை;
முதலில் உடைத்த கோதுமையை 2 முறை கழுவி குக்கரில் சிறிது நெய்விட்டு 3 கப் நீர் விட்டு 4 விசில் விட்டு வேகவிடவும். பின் ஒரு வாணலியில் நெய்விட்டு அதில் முந்திரி, திராட்சை வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் வேகவைத்த கோதுமையை சேர்த்து நன்கு கிளறி, அதில் தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க விடவும். அதில் வெல்லம் சேர்த்து கிளறவும்.
அதில் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க விட்டு கெட்டியானதும் சிறிது உப்பு, ஏலத்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான அசத்தலான கோதுமை பாயசம் ரெடி.
கோதுமை மாவு கார பணியாரம்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ரவை - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க;
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
காரட் துருவல் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, தயிர், உப்பு, சிறிது நீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு வாணலயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய பின் காரட் துருவல் சேர்த்து வதக்கி மாவில் கலக்கி, கொத்தமல்லி தழை சிறிது கலந்து கிளறிவிடவும்.
அடுப்பில் குழிப் பணியாரக் கல் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை ஒவ்வொரு குழியிலும் விட்டு திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
எல்லா மாவையும் ஊற்றி இது மாதிரி எடுக்கவும்.
சுவையான காரமான காலை, மாலை நேர சிற்றுண்டி ரெடி. இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன். செய்து சாப்பிட்டு அசத்துங்கள்.