
சென்ற தலைமுறையில் முகத்துக்கான மேக்கப் என்றால் கண் மை, அதை கொண்டே அழகாக புருவம் தீட்டிக்கொள்வது என சிம்பிளாக இருந்தது. தற்போது மேக்கப் நவீனமாகி முகத்தை அழகாக்கும் ஐப்ரோவை ஹைலைட் பண்ணி, அதை வசீகரமாக மாற்ற பல யோசனைகளை சொல்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
வீட்டிலிருந்தே எளிமையாக அழகாக்கி கொள்ள சில வழிகள்
முகத்தின் முழுமைக்கே முக்கிய தேவை புருவங்கள்தான். அதில் முக வடிவங்கள் ஆறுவிதமாக உள்ளது என்கின்றனர். வட்டம், நீள் வட்டம், நீளம், சதுரம், டைமண்ட், இதய வடிவம்.
ஓவல் வடிவ முகத்திற்கு ஷேடோ ஆர்ச் அல்லது மென்மையான ஆங்கிள் வடிவம் பொருத்தமாக இருக்கும். வட்ட முகத்திற்கு மேலே தூக்கினாற்போல ஆங்கிள் வடிவம் அழகாக இருக்கும். நீண்ட முகத்துக்கு பிளைட் ஐ ப்ரோ கச்சிதமாக இருக்கும்.
சதுரமான முகமெனில் திக்கான ஆங்கிள் புருவங்கள் நன்றாக பொருந்தும். இதய வடிவத்திற்கு புருவங்கள் சற்றே மேலே தூக்கியதுபோல ஆங்கிள் ஆர்ச் வடிவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
டைமண்ட் வடிவ முகத்துக்கு ரவுண்டு வடிவ புருவங்கள் கச்சிதமாக இருக்கும். புருவங்கள். வரைவது கலை. எங்கே ஆரம்பித்து எங்கே முடிக்க வேண்டும் என தெரிந்து செய்தால் அழகாக இருக்கும்.
இரண்டு புருவங்களுக்கு இடையேயான இடைவெளிதான் முகத்தை சீராக காண்பிக்கும். மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் புருவங்கள் வரையத் தொடங்கி நம்முடைய வடிவத்துக்கு தகுந்த மாதிரி ஐப்ரோ போட்டுக்கொள்ள வேண்டும்.
ஐப்ரோ பொறுத்த மட்டில் பவுடர், ஜெல், பென்சில் என உள்ளன. இவைகள்தான் பில்லர்கள். பவுடர் நேச்சுரல் லுக் கொடுக்கும். ஐப்ரோ நல்லா திக்காக தெரியணும். மேலும் வடிவமும் ஷார்ப்பா தெரியணும் னு நினைக்கிறவங்க பென்சில் ஜெல் பயன்படுத்தலாம். பென்சில் ஜெல் பயன்படுத்தும்போது புருவங்களின் முடிவில் எவ்வளவு திக்காக வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் ஆரம்பிக்கும் இடத்தில் முடிந்தவரை லைட்டாக கொடுப்பது நல்லது.
புருவங்களுக்கு பென்சில் உபயோகிக்க இயற்கையாக இருக்கும். மேக்கப் முடிந்தபிறகு புருவங்களை ஹைலைட் செய்ய ஷேட் கன்சீலர் கொண்டு புருவங்களை ஹைலைட் செய்யலாம். இவை புருவங்களை பளிச்சென காட்டும்.
இதை தவிர்த்து நிரந்தரமான புருவங்களும் கூட உள்ளன. 3-4 வருடங்கள் வரை வரும் மைக்ரோ ப்ளேடிங் முறை உள்ளது. பிடித்த வடிவத்தில் அமைத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். நல்ல பிராண்டட் பொருட்களையே எப்போதும் உபயோகிக்க பினிஷிங் நன்றாக இருப்பதோடு சரும தொந்தரவுகள் எதுவும் ஏற்படாது.
இவை அனைத்தும் நான் வழக்கமாக செல்லும் பியூட்டி பார்லர் மேடம் சொன்னதை தொகுத்து எழுதியுள்ளேன்.