
வெங்காயம் மற்றும் வெந்தயம் முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டதாகும். இந்த இரண்டின் எண்ணையும் சேர்த்துப் பயன்படுத்த கூந்தல் ஆரோக்கியம் இன்னும் மேம்படும்.
வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. இதில் உள்ள கெராடின் என்ற புரதம் முடிக்கு மிகவும் அவசியமானது. சல்ஃபர் கொலாஜனை அதிகரிக்கச் செய்வதுடன், உச்சந்தலையில் நல்ல இரத்த ஓட்டத்தைத் தருவதால் வேர்க்காலிலிருந்து முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. மேலும் வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகளால் அரிப்பு ,பொடுகு பிரச்சனைகளைத் தடுக்கிறது.
வெந்தயம்
வெந்தயத்தில் புரதமும், நிகோடினிக் அமிலமும் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், வைட்டமின் ஏ,சி, மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி மெலிவதைத் தடுக்கிறது. முடி நரைப்பதைத் தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளால் பொடுகு பிரச்னையை தடுக்கிறது.
வெங்காயம், வெந்தய எண்ணெய் எப்படி தயாரிப்பது?
வெங்காயம் பெரியது 1
வெந்தயம் 2டேபிள் ஸ்பூன்ஸ்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில். அரை கப்.
செய்முறை:
வெங்காயத்தை பொடியாய் அரிந்து அரைத்து ஜுஸ் எடுத்துக்கொள்ளவும். இதை நன்றாக வடிகட்டி எடுக்கவும்.
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பிறகு மறுநாள் அதை அரைக்கவும். பிறகு அரை கப் தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணையை அடுப்பை சிறிதாக வைத்து சூடு பண்ணவும். பிறகு இதில் அரைத்த வெந்தய பேஸ்டை சேர்க்கவும். நன்றாக கிளறவும். 5அல்லது பத்து நிமிடங்கள் சூடு செய்த பிறகு இறக்கவும். இப்போது வெங்காய ஜுஸ் சேர்த்து 5 நிமிடங்கள் சிறியதாக அடுப்பை வைத்து கொதிக்க விடவும். பிறகு கீழே இறக்கி நன்கு ஆறவிடவும். பிறகு இதை வடிகட்டி கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்கவும்.
எப்படி பயன்படுத்துவது?
தலைக்கு மசாஜ்; உங்கள் விரல்களால் இந்த எண்ணையை எடுத்து தலையில் மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதை இரவில் அப்படியே வைத்து மறுநாள் வாஷ் செய்யவும். தலையணை எண்ணை ஆகாமல் இருக்க ஷவர்கேப் உபயோகிக்கவும். வாரத்தில் இரண்டு அல்லது முன்று முறை இப்படிச் செய்தால் முடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
வெங்காயத்தின் சல்ஃபர் முடி பிளவைத்தடுக்கும். முடி மெலிதலையும் நீக்கும். வெந்தயம் பொடுகு அரிப்பு மற்றும் நரைப்பதைத் தடுக்கும். இந்த எண்ணைய் முடிக்கு நல்ல பொலிவைத் தரும். முடி மிருதுவாகவும் இருக்கும்.