உங்க பட்டுப் புடவை எப்போதும் புதுசு போல இருக்கணுமா? இதைச் செய்யுங்க!

silk sarees
How to protect silk sarees
Published on

பெண்களின் பாரம்பரிய உடை என்றாலே சேலைதான். அதுவும் பட்டுச் சேலைக்கு மவுசு அதிகம். திருமணம், சடங்கு, காதுகுத்து இப்படி எந்த விஷேசம் வந்தாலும் பெண்கள் அணிவது பட்டுபுடவைதான். அப்படிப்பட்ட பட்டுப்புடவை 1000 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. பெண்கள் தங்கள் வசதிக்கேற்ப பத்துப்புடவைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் பட்டுப்புடவையை வாங்கிய பெண்களுக்கு அதை எப்படி பாதுகாக்க வேண்டும் துவைக்க வேண்டும் என்று தெரியவில்லை. உடனடியாக லாண்டரிக்கு ட்ரை க்ளீனிங்கிற்கும் கொடுத்து விடுவார்கள். இனி வீட்டில் இருந்தே பட்டுப்புடவைகளை துவைக்கவும், எளிதில் பாதுகாக்கவும் சில டிப்ஸ்களை தெரிந்துகொள்ளலாம்.

குளிர்ந்த நீரால் துவைக்கவும் :

ட்டுப் புடவைகளைத் துவைக்க எப்போதும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள். பட்டுப் புடவையைத் துவைக்கும் முன் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். வெப்பத்தால் தொட்டியில் உள்ள தண்ணீர் சூடாக மாறும். எனவே, பட்டுப் புடவைகளைத் துவைக்க வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம். இதனால், சேலை நிறத்தை இழக்கும்.

வினிகர் பயன்படுத்தவும் :

சேலையை தண்ணீரில் ஊறவைத்த பிறகு, ஒரு வாளி சுத்தமான தண்ணீரை எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெள்ளை வினிகரை சேர்க்கவும். பிறகு, அதில் பட்டுப் புடவையை நனைத்து பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். சுத்தமான தண்ணீரில் கழுவிய பின் சேலையில் உள்ள கறைகள் நீங்கும்.

வெயிலில் உலர்த்த கூடாது:

ட்டுப் புடவையைத் துவைத்த பின், அதைக் கடுமையாகப் பிழிய வேண்டாம். சிறிது நேரம் உலர அனுமதிக்கவும். அதன் பிறகு சேலையை நிழலில் உலர்த்த வேண்டும். சூரிய வெப்பத்திலிருந்து விலகி வைக்க மறக்காதீர்கள். ஏனெனில் சேலையின் நிறம் மங்கலாம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கும் 12 வழிமுறைகள்!
silk sarees

தனியாக ஸ்டோர் செய்யவும்:

ட்டுப் புடவைகளை சாதாரண புடவைகளுடன் சேமித்து வைக்காதீர்கள். எப்பொழுதும் பட்டுப் புடவைகளை ஒரு தனி இடத்தில் வைத்து பருத்தி துணியால் நன்றாக மூடி வைக்கவும். இதன் மூலம் உங்கள் பட்டுப் புடவைகள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

-விஜி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com