கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதை செஞ்சாலே போதுமே!

Dark Neck
How to Remove Naturally Dark Neck

சிலருக்கு கழுத்து பகுதி மட்டும் கருமையாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் அது அவர்களுக்கு மோசமான உணர்வு மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம். இது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைதான். இயற்கையான முறையில் சில சரும பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். இந்த பதிவில் முற்றிலும் இயற்கையான முறையில் கழுத்தில் உள்ள கருமையை நீக்கி, எப்படி பழைய நிறத்தை அடைவது என்பது பற்றி பார்க்கலாம். 

ஸ்க்ரப்: சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஸ்க்ரப் தயாரித்து, கழுத்தில் தடவி வந்தால், இறந்த பழைய சரும செல்கள் நீங்கி, புதிய செல்கள் உருவாக வழிவகுக்கும். வாரத்தில் இரண்டு முறை ஸ்க்ரப் பயன்படுத்தி மசாஜ் செய்து குளித்து வந்தால், விரைவில் கழுத்து கருமை பாதிப்பிலிருந்து விடுபடலாம். 

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு அதன் இயற்கையான பிளீச்சிங் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது சருமத்தின் கருமையான பகுதிகளை ஒளிரச் செய்யும். எலுமிச்சை பழத்தை பிழிந்து, காட்டன் துணி பயன்படுத்தி, கழுத்தில் தேய்த்து சுமார் கால் மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சிலருக்கு எலுமிச்சை சாறு தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், கவனத்துடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். 

கற்றாழை: கற்றாழை இயற்கையாகவே சருமத்தை மென்மையாக்கி ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். கற்றாழையிலிருந்து அதன் ஜெல்லை பிரித்தெடுத்து உங்கள் கழுத்தில் அப்படியே தடவுங்கள். பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து கழுவி விடவும். இப்படி தினசரி செய்து வந்தால், கழுத்தின் கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். 

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் சருமத்திற்கு குளிர்ச்சியைத் தந்து தோல் நிறமியைக் குறைக்க உதவும். வெள்ளரிக்காயை அதன் தோலை நீக்கி, பேஸ்ட் போல செய்து கழுத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் தண்ணீரில் கழுவவும். வெள்ளரிக்கையை வழக்கமாக பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் விரைவில் மாறும். 

ஈரப்பதம்: வறட்சியை தடுக்கவும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் உங்கள் கழுத்தை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்.  எனவே உங்கள் சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்து, அவ்வப்போது கழுத்தில் தடவவும். 

சூரிய பாதுகாப்பு: நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது சருமத்தை கருமையாக்கும். எனவே உங்கள் கழுத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பது முக்கியம். வெயிலில் வெளியே செல்வதற்கு முன் அதிக SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். மேலும் உங்கள் கழுத்தை மறைக்கும் ஸ்கர்ஃப் அல்லது ஆடையை அணியவும். 

இதையும் படியுங்கள்:
செட்டிநாடு ஸ்டைலில் பாசிப்பருப்பு அல்வா செய்யலாம் வாங்க! 
Dark Neck

கழுத்து கருமை என்பது உடனடியாக மறைந்துவிடும் என எதிர்பார்க்க வேண்டாம். இதற்கு சில காலம் பிடிக்கலாம். எனவே நீங்கள் முயற்சிக்கும் விஷயங்களை தொடர்ச்சியாக செய்து பொறுமையுடன் இருங்கள். இவற்றை முயற்சித்தும் கழுத்து கருமை நீங்கவில்லை என்றால் ஒரு நல்ல தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com