
பாவாடை அணியும் பகுதியில் கருமை, கழுத்தின் பின் பகுதி கருமை, பிரேஸியர் லைன் என கருமை படர்ந்திருக்கும். இவற்றில் சில சமயம், அரிப்பு, புண் ஏற்பட்டு கஷ்டம் கொடுக்கும். இதை தீர்க்க சில எளிய வழிகளை பின்பற்றிட கருமை மறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இடுப்பின் கருமைபோக
புடவையோ, சுடிதாரோ இறுக்கி கட்டுவதால் அந்த இடம் கருத்து காணப்படும். இதைப்போக்க தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் எ சாறுடன் சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் போல் கழுவி தேய்த்துவர இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.
இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு டீஸ்பூன் கடலைமாவு அல்லது மஞ்சள் தூள் சேர்த்து பேக் போல போட்டு காய்ந்ததும் கழுவி விட்டு, மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்து விடவும். இதை வாரத்தில் மூன்று நான்கு முறை செய்யலாம். கருமை மறைந்து நல்ல நிறம் கிடைக்கும்.
பின் கழுத்தின் கருமை போக
ஒரு ஸ்பூன் தவிடு எடுத்து ஈரக்கையால் தொட்டு தினமும் குளிக்கும் முன் கழுத்தின் பின்புறம் மசாஜ் கொடுக்க இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி இரண்டு டீஸ்பூன் தேன் ஒரு தேக்கரண்டி கலந்து பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவி வந்தால் கருமை மறைவதுடன் சருமமும் மிருதுவாகும்.
அக்குள் பகுதியில் கருமை போக
அக்குள் பகுதியில் தேவையான காற்று கிடைக்காததால் வியர்வை மற்றும் அழுக்கு சேர்ந்து கருமை படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க வாரம் இருமுறை ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு அக்குள் பகுதியில் மசாஜ் கொடுத்துவிட்டு மாதுளம்பழ விதைப் பவுடருடன் தண்ணீர் சேர்த்து குழைத்து அதனுடன் தே எண்ணெய் சேர்த்து மசாஜ் கொடுக்கவும். ஒரு ஸ்பூன் எ சாறும், தேனும் கலந்து பேக்போல போட்டு காய்ந்ததும் கழுவிவர நல்ல பலன் கிடைக்கும்.
பிரேசியர் லைன்
மிக இறுக்கமாக உள்ளாடைகளை அணிவதால் பிரேஸியர் ஸ்ட்ராப் பதிந்த இடம், தோள்பட்டை என கருமையாகி இருக்கும். இதைப் போக்க ஸ்ட்ராப் குஷனை வாங்கி பயன்படுத்தலாம். குளிக்கும் முன் அரிசி மாவுடன் சிறிது பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக்கழுவவும். இது இறந்த செல்களை அகற்ற உதவும். பின் பால் ஏடு அல்லது வெண்ணையை கொண்டு கருமை படர்ந்து இடத்தில் தேய்த்துக்குளித்து வந்தால் நாளடைவில் கருமை மறையும்.
எந்தவித உள்ளாடைகளையும் இறுக்கமாக அணியாமல் சற்று தளர்வாக அணிய கருமை ஏற்படாது.