இது கூட தெரியாதா? பாடி லோஷனை இப்படித்தான் பயன்படுத்தணும்!

body lotion
How to use body lotion properly?
Published on

நம்முடைய சருமம் நம்மை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலம் போன்றது. நம் சரும அழகை வைத்துதான் அனைவரும் நம்மை எடை போடுவார்கள். எனவே, இதை ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் வைத்திருப்பது நம் அழகை மேம்படுத்தும்.‌ நம் சருமத்தை அழகு படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது பாடி லோஷன். இது நம் சருமத்தை ஈரப்பதம் ஆக்குவதற்கு மட்டுமல்ல, சருமத்தை பாதுகாப்பதற்கும்தான். ஆனால், பாடி லோஷனை, எப்படி பயன்படுத்துவது என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும். அதற்கான விடை இதோ இந்தப் பதிவில்.‌

பாடி லோஷன் என்பது திரவம் அல்லது கிரீம் வடிவில் இருக்கும் ஒரு சருமப் பராமரிப்பு பொருள். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்கி பாதுகாக்கிறது. பாடி லோஷன்களில் பல்வேறு வகையான ஈரப்பதமூட்டும் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. 

பாடி லோஷன் பயன்படுத்துவதன் நன்மைகள்: 

பாடி லோஷன்கள் சருமத்தின் மேற்பரப்பில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கின்றன. இது சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். 

பாடி லோஷன்களில் உள்ள சில பொருட்கள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. இவை உங்களின் சரும நிறத்தை சீரமைத்து எப்போதும் ஒளிரச் செய்யும். 

பாடி லோஷனைப் பயன்படுத்தும் முறைகள்: 

குளித்து முடித்ததும் உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்து, பாடி லோஷனை பயன்படுத்த வேண்டும். சிறிய அளவு லோஷனை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு சருமம் முழுவதும் மெதுவாக தேய்க்க வேண்டும். லோஷனை வட்ட வடிவில் உடலில் தேய்க்கும்போது அது சருமத்தில் எளிதாக ஊடுருவும். 

இதையும் படியுங்கள்:
சரும பொலிவுக்கு பொட்டேடோ ஃபேஸ்பேக்! உருளைக்கிழங்கு செய்யும் மேஜிக்!
body lotion

லோஷன் தடவிய பிறகு சருமத்தை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பொலிவாக்கும். முழங்கைகள், கணுக்கால்கள், கால்பகுதிகள் போன்ற வறண்டு போகக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக லோஷன் பயன்படுத்துவது நல்லது. 

பாடி லோஷன் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க ஒரு எளிய வழியாகும். சரியான பாடி லோஷனைத் தேர்ந்தெடுத்து அதை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மிகவும் அழகான ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com