சரும பொலிவுக்கு பொட்டேடோ ஃபேஸ்பேக்! உருளைக்கிழங்கு செய்யும் மேஜிக்!

Potato face pack
Potato face pack
Published on

பெரும்பாலான நபர்களுக்கு முகத்தில் பருக்கள், கரும்புள்ளி என்று பல சரும பிரச்சனைகள் இருக்கும். இதற்காக அதிக செலவு செய்து பார்லர் சென்று சரும பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்வார்கள். இன்னும் சிலர் மருத்துவரை அணுகி சரும பிரச்சசனைக்கு தீர்வு காண்பார்கள். இந்நிலையில் நம் வீட்டில் உள்ள பொருளை வைத்து சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

அந்தவகையில் உருளைக்கிழங்கு வைத்து சருமத்தில் தோன்றும் பருக்கள், கருவளையம், கரும்புள்ளி ஆகியவை மறைந்து முகம் ஃபேஷியல் செய்தது போல எப்படி மாற்றுவது என்பதை நாம் இந்த பதிவில் காணலாம்.

உருளைக்கிழங்கு செய்யும் மேஜிக்:

சருமத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் C உருளைக்கிழங்கில் அதிகமாக உள்ளது. எனவே இதன் சாற்றை நேரடியாக முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. உருளைக்கிழங்கு சாறு வயதான தோற்றத்தை குறைக்கிறது. முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் முகத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி மறையும்.

உருளைக்கிழங்கில் பாலிபினால்கள் உள்ளன. இது சருமம் சூரியனால் பாதிப்படைவதை தடுக்கிறது. உருளைக்கிழங்கு சாறு முகத்தில் தேய்த்து வந்தால் உங்கள் சரும நிறத்தை பாதுகாக்கும்.

உருளைக்கிழங்கில் அசெலிக் அமிலம் (Azelaic) உள்ளதால், கரும்புள்ளி, கருவளையம், ஹைப்பர் பிக்மென்டேஷன் ஆகியவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. 

உருளைக்கிழங்கு மற்றும் முல்தானி மிட்டி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

தேன், பாதம் எண்ணெய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து ஃபேஸ் பேக் செய்து அதை முகத்தில் அப்ளை செய்து வந்தால், உருளைக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாதம் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஆகியவை சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது. இதனால் சருமம் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உடல் அமைப்புக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்வது எப்படி?
Potato face pack

உருளைக்கிழங்கு சாறுடன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் ஒரு சிலருக்கு முகத்தில் அடிக்கடி ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

கேடகோலேஸ் மற்றும் கோஜிக் அமிலம் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளதால் இது அதிகப்படியான மெலனின் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் கருமை நிறம் தடுக்கப்படும்.

கருவளையம் உள்ளவர்கள் இரவு உறங்குவதற்கு முன்பு உருளைக்கிழங்கு சாற்றை கண்களுக்கு கீழ் அப்ளை செய்து மறுநாள் கழுவலாம். இல்லையென்றால் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி கண்களில் வைத்து கொண்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் கருவளையம் மறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com