
Hair Extensions: ஹேர் எக்ஸ்டென்ஷன் என்பது கூந்தலின் நீளம், அடர்த்தி அல்லது ஸ்டைலை அதிகரிக்க பயன்படுத்தும் ஒருவகை செயற்கை கூந்தலாகும். இது சொந்த முடியுடன் இணைக்கப்பட்டு கூந்தலின் தோற்றத்தை மாற்ற உதவுகிறது.
முடி நீட்டிப்புகள் அல்லது போலி முடி என்று அழைக்கப்படும் இவை மனித முடிக்கு நீளத்தை சேர்க்கும் அழகு சிகிச்சை ஆகும். இது செயற்கை முடியை இணைப்பதன் மூலம் இயற்கையான முடியில் கிளிப் செய்யப்படுகின்றன அல்லது ஒட்டப்படுகின்றன அல்லது தைக்கப்படுகின்றன. இந்த முறையில் டேப் - இன் நீட்டிப்புகள், கிளிப்-இன் நீட்டிப்புகள் மற்றும் விக் போன்றவை அடங்கும்.
ஹேர் எக்ஸ்டென்ஷனில் நிறைய வகைகள் உள்ளன.
கிளிப் -இன் எக்ஸ்டென்ஷன் (Clip-in extension): கூந்தலில் கம்பி கிளிப் மூலம் எளிதாக இணைக்கப்பட்டு பின்பு எடுக்கவும் முடியும் வகை இது.
வயர்ட் எக்ஸ்டென்ஷன் (Wired extension): கூந்தலில் கம்பி மூலம் இணைக்கப்பட்டு பிறகு ஒரு சிறப்பு கம்பி மூலம் இணைக்கப்படும் வகை இது.
கலர் செய்யப்பட்ட எக்ஸ்டென்ஷன் (Colored extension): இந்த வகை கூந்தலின் நிறத்தை மாற்றி நம் கூந்தலின் நிறத்துடன் பொருந்தக்கூடிய வகையில் இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது? (How to use hair extensions properly?)
நம் இயற்கையான கூந்தலின் நிறம், அடர்த்தி, நீளம் மற்றும் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப சரியான எக்ஸ்டென்ஷனை தேர்வு செய்வது அவசியம். தேர்வு செய்ததும் அவற்றை நம் கூந்தலின் வேர்ப்பகுதியில் வைத்து கம்பி கிளிப் அல்லது மற்ற இணைப்புகளை பயன்படுத்தி இணைக்க வேண்டும். எக்ஸ்டென்ஷனை பயன்படுத்திய பின்பு முடிக்கு ஷாம்பூ போடும் சமயம் மென்மையாக தடவி நல்ல கண்டிஷனரை பயன்படுத்தி பராமரிக்க வேண்டும்.
மிகவும் பிரபலமான மற்றும் பொதுவாகக் கிடைக்கும் முடி வகை பிரீமியம் ஹேர் என்று அழைக்கப்படும். இது பெரும்பாலான அழகு சாதன கடைகளில் அல்லது ஆன்லைனில் விற்கப்படுகிறது. இதில் எதிரெதிர் க்யூட்டிகல் அடுக்குகள் ஒன்றை ஒன்று பிடிப்பதால் ஏற்படுகிறது. இது விற்பனையில் மிகவும் சிறந்து விளங்குகிறது. பிரீமியம் முடியில் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று குறைந்த விலை கொண்டு அடிக்கடி முடி சிக்கலுக்கு ஆளாகக் கூடியது. மற்றொன்று சிக்கல் அற்ற வகை. இது முடிகளுக்கு இடையேயான உராய்வை குறைத்து சிக்கல் அற்றதாக இருப்பதாலும், ஆரோக்கியமான முடியின் தோற்றத்தை கொடுப்பதற்காக முடிக்கு பளபளப்பான தோற்றத்தை அளிக்கக்கூடிய லேமினேட் பூசப்படுகிறது.
நன்மைகள்:
முடி நீட்டிப்புகள் பல நன்மைகளையும் தீமைகளையும் கொண்டுள்ளன.
கூந்தலின் நீளத்தை அதிகரிக்கலாம்.
அடர்த்தியை அதிகரிப்பதுடன் விரும்பிய ஹேர் ஸ்டைல் செய்யலாம்.
கூந்தலுக்கு ஒரு நல்ல தோற்றத்தை கொடுக்கும். இவை முடி உதிர்தல், முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
உடைந்து போன மற்றும் சேதமடைந்த முடியை மறைக்க உதவுகின்றன. நல்ல தரமான முடி நீட்டிப்புகள் நம்முடைய இயற்கையான முடியுடன் தடையின்றி கலப்பதால் வித்தியாசம் தெரியாமல் அழகான தோற்றத்தை கொடுக்கின்றன.
தீமைகள்:
சில நீட்டிப்பு முறைகள் நம் இயற்கையான முடியை சேதப்படுத்தலாம்.
தரமான மற்றும் நிபுணரால் பொருத்தப்படுபவை விலை உயர்ந்ததாக இருப்பது
முடி நீட்டிப்புகளுக்கு பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. தவறான பராமரிப்பு நம்முடைய இயற்கையான முடியையும் கூட சேதப்படுத்தலாம்.
எல்லா வகையான நீட்டிப்புகளும் எல்லா வகையான முடிக்கும் பொருந்தாது.
சில நீட்டிப்புகள் நம் தலைக்கு அதிக எடை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
எந்த வகையான நீட்டிப்புகளை தேர்ந்தெடுப்பது?
நம் கூந்தலை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அத்துடன் பட்ஜெட்டிற்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நிபுணரின் கருத்தை கேட்பது மிகவும் அவசியம். நமக்கு பொருத்தமான நீட்டிப்பு முறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் முடிக்கு ஒரு புதிய அழகான தோற்றத்தை கொடுக்க முடியும்.