
ஒரு நபரின் அடையாளத்தையும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் வடிவமைப்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. கூந்தல் நீளமாக இருந்தாலும் சரி, குட்டையாக இருந்தாலும் சரி... நம் முக அமைப்புக்கு ஏற்ற சிகை அலங்காரம் எது? என்பதை தேர்ந்தேடுப்பதில் நமக்கு நிறைய குழப்பங்கள் உண்டாகும். அதை எப்படி நிவர்த்தி செய்வது?
நீண்ட (Long) அல்லது குறுகிய (Short) கூந்தல் மிகவும் அழகாக இருக்குமா என்பதைத் தீர்மானிப்பதில் முக அமைப்பு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
முக அமைப்புக்கேற்ற கூந்தல் நீளம்:
ஓவல் வடிவ முகங்களைக் (Oval) கொண்ட ஆண்கள் கிட்டத்தட்ட எந்த முடி நீளத்திற்கும் (Long or short) பொருந்தக்கூடிய வகையில் இருப்பார்கள்.
வட்ட வடிவ முகங்களைக் (circle) கொண்டவர்களுக்கு பெரும்பாலும் நீண்ட சிகை அலங்காரம் பொருந்தும். இது அவர்களுக்கு ஒரு மெலிதான முக அமைப்பை உருவாக்குகின்றன.
கூர்மையான தாடைக் கோடுகளுக்கு (sharp jawlines) பெயர் பெற்ற சதுர முகம் (Square-faced men) கொண்ட ஆண்களுக்கு கம்மியான (short) கூந்தலே அழகான தோற்றத்தைத் தரும். தேவைப்பட்டால் ஒரு வசீகரமான தோற்றத்திற்கு இவர்கள் நீளமான முடியையும் பயன்படுத்தலாம்.
இதய வடிவ முகங்களுக்கு (heart-shaped faces) medium and long சிகை அலங்காரம் கட்சிதமாகப் பொருந்தும். இது இவர்களின் குறுகிய கன்னத்தைச் (narrower chin) சமப்படுத்த ஓரளவு அகலத்தைச் சேர்க்கின்றன.
வாழ்க்கை முறை மற்றும் நடைமுறை சார்ந்த விஷயங்கள்:
ஒரு ஆணின் சிறந்த முடி வடிவத்தைத் தீர்மானிப்பதில் அவரது தினசரி வழக்கம், பின்பற்றும் ஸ்டைல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறுகிய கூந்தல் குறைந்த பராமரிப்புடன் இருக்கும். அதன் வடிவத்தைத் தொடர நீங்கள் குறைந்தபட்ச ஸ்டைலிங்குடன் அடிக்கடி வெட்ட (Trim) வேண்டிய தேவையும் இருக்கும். இதுபோன்ற பராமரிப்புகள் நேர்த்தியாகவும், பளபளப்பாகவும் தோற்றத்தை வைத்திருக்க விரும்புவர்களுக்கு நன்றாக பொருந்தும்.
நீண்ட கூந்தலைப் பராமரிக்க ஒருவருக்கு அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் சிறப்பான கவனிப்பு தேவைப்படுகிறது. இதில் நீரேற்றம் (hydration), கண்டிஷனிங் (conditioning), அவ்வப்போது வெட்ட வேண்டியிருக்கும் (Trim). இவை நீண்ட கூந்தலின் அடர்த்தியையும் தேகத்தையும் பாதுகாக்கிறது.
இருப்பினும், ஒரு நபர் தன் சிகை அலங்காரங்களைப் பரிசோதிக்க விரும்பினால் நீண்ட முடி அவர்களுக்குப் பலவிதமான விருப்பங்களைச் செய்ய அனுமதிக்கிறது.
சுய மதிப்பீட்டு முறை:
பிறரின் தலையீடு இல்லாமல் தமக்குப் பிடித்த முடி அலங்காரத்தைத் தீர்மானிக்க விரும்பும் ஆண்களுக்குப் பரிசோதனை செய்வதற்கு சில புதுமையான வழிகள் உள்ளன.
அதில் ஒன்று கண்ணாடி (mirror) சோதனை. நம் முடியின் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து ஒரு நபர் தங்கள் தலைமுடியை வெட்டாமல் வெவ்வேறு நீளங்களை வைத்து தீர்மானிக்கலாம்.
மற்றொரு அணுகுமுறை கடந்த காலப் புகைப்படங்களை ஒப்பிட்டு எந்த வடிவம் நமக்கு அதிக ஈர்ப்பைத் தருகிறது என்பதை பகுப்பாய்வு (Analyse) செய்யலாம்.
இதோடு டிஜிட்டல் சிகை அலங்காரப் பயன்பாடுகளும் இருக்கின்றன. அதில் உள்ள மெய்நிகர் (Virtual) பரிசோதனையை மேற்கொண்டு ஆண்கள் தங்களுக்குப் பிடித்த பாணிகளுடன் (Style) ஒப்பிட்டுப் பார்க்கலாம்.