பளபளக்கும் சருமம் வேண்டுமா? தேனை இப்படி பயன்படுத்துங்கள்!

How to Use Honey for Glowing Skin
How to Use Honey for Glowing Skin

தேன் பல நூறு ஆண்டுகளாக பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வளிக்கும் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஏராளமான நன்மைகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் இருக்க உதவுகின்றன. உங்களது சருமப் பராமரிப்புக்கு தேனை பயன்படுத்த விரும்பினால், அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

தேன் கிளன்சர்: தேனை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். முதலில் வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவி, கொஞ்சமாக தேனை எடுத்து தடவுங்கள். பின்னர் மெதுவாக மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து கழிவினால் உங்கள் சருமத்தில் உள்ள அத்தனை அசுத்தங்களும் நீங்கிவிடும். 

தேன் ஃபேஸ் மாஸ்க்: தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாகக் கலந்து வீட்டிலேயே ஒரு எளிய ஃபேஸ் மாஸ்க் உருவாக்கலாம். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு பின்னர் கழுவவும். இந்த மாஸ்க் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கும். 

ஸ்பாட் டிரீட்மென்ட்: முகப்பரு மற்றும் கரும் புள்ளிகளுக்கு ஸ்பாட் சிகிச்சையாகவும் தேனைப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் தேனை நேரடியாகத் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு வீக்கத்தைக் குறைக்கவும் அதை விரைவாக சரி செய்யவும் உதவும். 

தேன் குளியல்: உங்களது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கு, நீங்கள் குளிக்கும் நீரில் சில டீஸ்பூன் தேனை சேர்த்து குளிக்கவும். இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். 

தேன் மற்றும் மாய்ஸ்சரைசர்: உங்கள் வழக்கமான மாய்ச்சரைசரில் சில துளிகள் தேன் சேர்ப்பதால், அதன் ஆற்றல் அதிகரிக்கும். அந்த மாய்ஸ்ரைசரை முகத்தில் தடவினால், எப்போதும் ஈரப்பதத்துடன் இயற்கையான பிரகாசத்தை கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
தேன் உறிஞ்சும் விநாயகர் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்!
How to Use Honey for Glowing Skin

தேனைப் பயன்படுத்தி சருமத்தை நன்றாக பராமரிக்க, இயற்கையான தேன் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேனை பயன்படுத்துவதற்கு முன்பாக உங்களுக்கு எவ்விதமான ஒவ்வாமை எதிர்வினைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். இவை அனைத்தையும் சரியாக செய்வது மூலமாக, உங்கள் சருமம் என்றும் இளமையுடன் இயற்கை பளபளப்பை வெளிப்படுத்தும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com