பளபளப்பான சருமத்தைப் பெற அன்னாசி பழத்தை இப்படியெல்லாம் பயன்படுத்துங்கள்! 

Pineapple for Glowing Skin
Pineapple for Glowing Skin

கோடைகாலத்தில் பளபளப்பான சருமத்தைப் பெறுவது அனைவரது விருப்பமாக இருக்கும். இதற்காக சந்தையில் ஏராளமான சருமப் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், இயற்கையாக நாம் பயன்படுத்தும் பொருட்கள் நமக்கு எவ்விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. அத்தகைய இயற்கை பொருட்களில் ஒன்றுதான் அன்னாசிப்பழம். இதில் விட்டமின்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளதால், உங்கள் தோல் பராமரிப்புக்கு பெரிதளவில் உதவும். சரி வாருங்கள் இப்பதிவில் சருமத்தை பளபளப்பாக மாற்ற அன்னாசிப் பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

அன்னாசி பேஸ் மாஸ்க்: அன்னாசி பழத்தைப் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரித்து சருமத்திற்கு பயன்படுத்தினால் உண்மையிலேயே இயற்கை அழகை நீங்கள் பெற முடியும். இதை செய்வது மிகவும் எளிது. அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதை அப்படியே நேரடியாக முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். பின்னர் 15 நிமிடம் கழித்து கழிவினால் இயற்கையான பளபளப்பை நீங்கள் பெறுவீர்கள். 

அன்னாசி டோனர்: அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்துவது சருமத்தின் pH அளவை சமநிலையாக வைத்திருக்க உதவும். இதற்காக அன்னாசிப் பழத்திலிருந்து சாற்றைப் பிரிந்தெடுத்து, அதை சம பங்கு அளவு தண்ணீரில் சேர்க்கவும். பின்னர் முகத்தைக் கழுவி பிறகு ஒரு காட்டன் மூலம் இந்த கலவையை முகத்தில் தடவவும். இந்த டோனர் அதிகப்படியான எண்ணெய், அசுத்தங்களை நீக்கி சரும நிறத்தை மேம்படுத்த உதவும். 

அன்னாசி மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்: அன்னாசி பழத்தை தயிருடன் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் தயாரித்து முகத்தில் பூசினால் சருமத்திற்கு ஊட்டமளித்து இயற்கை பிரகாசத்தை ஏற்படுத்தும். இதை செய்வதற்கு அன்னாச்சி பழச்சாறு மற்றும் தயிரை ஒன்றாக சேர்த்து கலந்து பேஸ்டை உருவாக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு முகத்தைக் கழுவினால், முகம் தகதகவென ஜொலிக்க ஆரம்பிக்கும். 

அன்னாசி ஜூஸ்: அன்னாசி பழத்தை சருமத்தின் மேற்பூச்சுக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, அண்ணாச்சி ஜூஸ் உட்கொள்வது மூலமாகவும் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை நீங்கள் அடையலாம். இது உங்கள் சருமத்திற்கு உள்ளே இருந்து ஊட்டமளிக்க உதவும். எனவே கோடைகாலங்களில் அவ்வப்போது அன்னாசி பழ ஜூஸ் குடியுங்கள். 

இதையும் படியுங்கள்:
அன்னாசி பழத்தில் குழம்பு செய்யலாம் வாங்க!
Pineapple for Glowing Skin

இப்படி அன்னாசிப்பழம் சருமத்திற்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் என்றாலும், சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அன்னாசி பழத்தில் உள்ள ரசாயனங்கள் ஏற்கனவே சில தோல் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் சருமத்திற்கு இது ஒத்து வருமா என்பது தெரிந்த பிறகு பயன்படுத்துவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com