
நகைகள் என்றாலும் அழகு...
பெண்கள் என்றாலும் அழகு...
பெண்கள் நகைகளை அணியும்போது அழகுக்கு அழகு சேர்க்கிறது. அந்த நகைகளையே பொருத்தமாக தேர்ந்தெடுத்து அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும். உடல் அமைப்புக்கும் உடல் நிறத்துக்கும் ஏற்ற மாதிரி தேர்ந்தெடுத்து அணியும்போது இந்த நகைகளால் இந்தப் பெண்ணுக்கு அழகா? அல்லது இந்த பெண்ணால் இந்த நகைக்கு அழகா? என பார்ப்பவர்கள் எல்லாம் வியப்பு அடைவார்கள்.
பொதுவாகவே, ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று பெரிய அளவிலான நகைகளை அணிந்தால் எடுப்பான தோற்றம் கிடைக்கும். அகரமான கழுத்தோடு தழுவும் நெக்லஸ், சோக்கர் அணியலாம். கூடவே ஒரு நீளமான செயினை அணியலாம்.
உயரம் குறைவானவர்கள் நீளமான சங்கிலி, தொங்கும் மாடல் காதணிகளைத் தவிர்க்கவேண்டும்.
கழுத்துப்பகுதி குட்டையாக இருந்தால் நீளமான ஒற்றை கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலி டாலர் வைத்து அணியலாம் காதல் ஜிமிக்கி வகைகள் அணியலாம்.
கழுத்து மிகவும் அகலமாக இருப்பவர்கள் கழுத்தை மூடியபடி துப்பட்டா அணிந்து கொண்டு காதுகளில் தோடு அணியலாம். கழுத்தின் மீது கவனம் திரும்பாமல் காதுகளில் மீது திரும்பும்.
சற்றே பருமனாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். அவர்கள் பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாக காட்டும். கொஞ்சமாக இடத்தையும் அடைக்கும். மெல்லிய சங்கிலி சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை பிளெனாகவோ சிறிய டாலருடனும் அணிந்துகொண்டால் எடுப்பாக இருக்கும்.
ஒல்லியானவர்கள் நிறைய வளையல் அணிந்துகொண்டு பட்டையான ஜரிகை போட்ட புடவை, அணிந்து கொண்டால் நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும். எளிமையான புடவைக்கு அகலமான நிறைய வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் அணியலாம்.
குண்டான முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம்.
காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும். கழுத்தில் மெலிதான செயின் அணியும்போது காதணியை சற்று பெரிதாக அணிய வேண்டும். காதோரம் குட்டி குட்டி தோடுகள் அழகாக இருக்கும்.
அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள் ஒன்றின் கீழ் ஒன்று அடக்கடுக்காக, வரும் குடை ஜிமிக்கிகள், பெரிய வளையங்கள் போடலாம். காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகை கூட்டும் விசேஷங்களுக்கு செல்லும்போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ், போட்டுக்கொள்ளலாம்.
சிவந்த நேரம் உள்ளவர்களுக்கு பச்சைக் கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி அணியலாம். நிறம் குறைவானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அழகாக இருக்கும்.
குண்டு விரல்கள் இருந்தால் அணியும் மோதிரங்கள் மெல்லிய கம்பி போன்று இருக்கலாம். சிறு கற்கள் பதித்த நெளிமோதிரமும் அழகு சேர்க்கும்.
குண்டான கைகளுக்கு மெல்லிய வளையல்கள், மெல்லிய பிரேஸ்லெட் நீங்க ஸ்ட்ராப் வைத்த வாட்ச்கள் மிகவும் அழகாக இருக்கும்.
மெலிதான கைகள் இருந்தால் ஒற்றைக் கைக்குப் பட்டையான ஒரு பெரிய வளையல், இன்னொரு கையில் கையையே மறைக்கும் அளவுக்கு ஒரு டஜன் வளையல்களை அணிவதுதான் இப்போதைய பேஷன்.
எப்போதும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சேர்த்து அணியக்கூடாது.
வெள்ளி நகைகளுக்கு நீலம் மற்றும் சிவப்பு நிற ஆடைகளையும் அணியவேண்டும்.
உங்கள் வயதையும் பொறுத்தே நகைகளைத் தேர்வு செய்யவேண்டும்.
வயதானவர்கள் அளவில் சிறிய நகைகளை அணியவேண்டும்.
வயதில் சிறியவர்கள் பெரிய அளவிலான நகைகளை அணியலாம்.