ice cube massage
ice cube massageImage credit - pixabay.com

வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் ஐஸ் க்யூப் மசாஜ்!

வெயிலில் அதிக நேரம் அலைந்து விட்டு வீட்டினுள் சென்றாலே வியர்வையும், உடல் எரிச்சலும் அதிகரிக்கும். இதற்கு எளிய தீர்வாக ஐஸ் கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம். இதனால் வெயிலால் ஏற்பட்ட சரும எரிச்சல், தோல் சிவத்தை தணிக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் வெயிலால் அதிக சிரமத்தை சந்திப்பர்.

பெரும்பாலானவர்களுக்கு இந்த சீசனில் சரும அலர்ஜியால் பருக்கள் தோன்றும். அதில் வீக்கம் ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும். இதனை போக்க பத்து நிமிடங்கள் ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை நீங்கி சருமம் மிருதுவாகும். அதிக எண்ணெய் சுரப்பதை  தடுத்து புத்துணர்ச்சியை உண்டாக்கும்.

வெயிலில் அலைவதால் சருமத்தில் கருமை படியும். இதனை போக்க முகத்திற்கு ஐஸ்கட்டிகளை உபயோகிப்பதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகத்திற்கு பொலிவு கூடும். முகம் பளபளக்கும். ஐஸ் கட்டிகளைக் கொண்டு  மசாஜ் செய்வதன் மூலம் முதுமை அடைவது தடுக்கப்படும்.

ஐஸ்க்யூப் மசாஜ் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் முகச்சுருக்கம் வராது. ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் ஐஸ்கட்டி சேர்த்து மசாஜ் செய்வதன் மூலம் கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை யுகம் போக்கலாம். உதடுகள் மிருதுவாக ஐஸ்க்யூப் மசாஜ் உதவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவுகளை நனவாக்குவது எப்படி?
ice cube massage

புதினா, எலுமிச்சை சாறு கலந்து ஐஸ்க்யூப் தயாரித்து அதைக் கொண்டு மசாஜ் செய்ய சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மங்கு பரு க்ககளை போக்கி முகத்தை பொலிவாக்கும். தக்காளி சாறு சேர்த்து ஐஸ்க்யூப் தயாரித்து அதை கொண்டு மசாஜ் செய்ய சரும பிரச்சனைகள் வராது. பழச்சாறுகளையும் சேர்த்து ஐஸ் க்யூப் பாக்கி மசாஜ் செய்து வர முகம் பளிச்சிடும்.

ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com