உங்கள் கனவுகளை நனவாக்குவது எப்படி?

motivation image
motivation imagepixabay.com

னோதத்துவம் படித்த என் நண்பரோடு பேசி கொண்டிருக்கும்போது, சுய தூண்டல் (auto suggestion) குறித்து தெளிவாக கூறினார். உங்கள் கனவுகளை நனவாக்குவது எப்படி? ஐந்து கட்டங்களாக பிரித்து கொள்ளுங்கள்" என்றார்.

சுய தூண்டுதல். இதுவே உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும்.

1) உங்கள் இலக்கை தெளிவாக தீர்மானியுங்கள். ஒவ்வொரு இரவும் அந்த இலக்கை அடைந்து விட்டது போல மனதில் காட்சி உருவாக்கிப் பாருங்கள்.

2) சுய தூண்டல் திரும்ப திரும்ப நாள் முழுவதும் அந்த இலக்கு உண்மையில் நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3) எண்ணங்கனை பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருப்பதால், நமது இலக்கு பிரகாசமாக சுடர் விட்டு எரியும் யாகத் தீ போல.

4) இலக்கை எப்படி அடைவது என்ற சிந்தனை கதவுகள் கண்டிப்பாக திறக்கும். தெளிவான திட்டம் போடுங்கள். அது கனிந்திட எல்லா வாய்ப்புகளையும் தீர ஆலோசியுங்கள்.

5) பின் உங்கள் இலக்கு, செயல்முறை திட்டம், இலக்கை யடைய இறுதித் தேதி தெளிவாக எழுதுங்கள் தினமும் குறைந்தது 10 முறையாவது ஆழ்ந்த நம்பிக்கையுடன் சப்தமாக சொல்லுங்கள். நினைத்துக் கொண்டே இருப்பதை விட, வாய் விட்டு சப்தமாக சொல்லும்போது ஒரு வேகம் பிறக்கும்.

அவ்வளவு தான். இதை ஒரிரு நாட்கள் செய்து விட்டு, அப்படியே விட்டு விடாதீர்கள்.பயிற்சியை செய்து கொண்டே வாருங்கள். உங்களுக்குள்ளேயே தெளிவான Blue print உருவாகிவிடும். நீங்களே அதிசயிக்கும்படி சந்தர்ப்பங்கள் உருவாகும்.

எண்ணத்தின் ஆற்றலை உணர்ந்தவர்களுக்கு, இந்த வெற்றியின் ரகசியம் புரியும்.

இந்த சுய பிரகடனம் நம்மை நாமே நேர்மறை எண்ணங்கள் கொள்ள உதவும்.

1. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்

2. நான் ஆனந்தமாக இருக்கிறேன்.

3. நான் உற்சாகமாக இருக்கிறேன்.

4. நான் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அற்புதமாக உணர்கின்றேன்

5. எனக்கு பிரபஞ்சம் சகல ஐஸ்வர்யங்களையும், ஆசிர்வாதங்களாக தந்துள்ளது.

6. எல்லோரும் நல்லாயிருக்கனும் என மனதார பிரார்த்தனை செய்கின்றேன்.

7. எனக்கு வருமானம் பலவகையிலும் பெருக, இறை சக்தி துணை இருக்கட்டும் இருக்கட்டும்.

 8. எல்லா உறவுகளுக்கும் பணம், மகிழ்ச்சி பொங்கிப் பெருகட்டும்.

 9. என் குடும்பத்தினர், உறவுகள், நட்புகள், மற்றும் சுற்றத்தினர் என எல்லோரும் என்னிடம் அன்பாகவும், ஆதரவாகவும் உள்ளனர்.அவர்கள் அனைவரும்  அமோகமாக வாழ வேண்டும் இறைவா.

10. பணத்திலும், குணத்திலும் நான் மிளர்கின்றேன்.நான் நல்லதை நாடுவதால் எனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகிறது. நன்றி இறைவா.

இந்த 10 சுயபிரகடனங்களையும் மனதில் சுழல விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
பாவம் செய்தவர்கள் மேல் படாத அருவி… எங்கிருக்கு தெரியுமா?
motivation image

காலை எழும் போதும், இரவு தூங்கப்போகும் போதும் சொல்லுங்கள். அப்படியே சொல்ல சொல்ல இவை மனப்பாடம் ஆகும். தீய எண்ணங்கள் விலகும்.

நேர்மறை எண்ணங்கள் பெருகும். நீங்கள் பிரபஞ்சத்தில் பதிவு செய்யும் இந்த பிரகடனங்கள் நிச்சயம் உங்களுக்கு பல மடங்கு நன்மைகளை தந்தருளும். நல்ல எண்ணங்கள் வான்காந்த களத்தில் கலந்து, நமக்கு என்றும் சிறப்பே தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com