ஒல்லியாகத் தெரிய வேண்டுமென்றால் ஆடைகளை இனி இப்படி உடுத்துங்கள்!

Fashion Trends
Fashion Trends

தங்களை எப்போதும் ஒல்லியாகக் காண்பித்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவார்கள். அதற்கு ஏற்றவாறே ஆடைகளையும் வாங்குவார்கள். இல்லையெனில் ஒல்லி ஆவதற்கு ஏகப்பட்ட முயற்சிகளை எடுப்பார்கள். வீட்டில் நாம் எப்படி வேண்டுமென்றாலும் இருந்துக்கொள்வோம். ஆனால் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிக்கு செல்லும்போது மட்டும் முதல் நாளே நம்மை ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் ஆடைகளைத் தேடிக் கொண்டிருப்போம். ஆடைகளின் மூலம் நம்மை ஒல்லியாகக் காண்பிக்க நாம் சில ட்ரிக்ஸ்கள் செய்யலாம். அந்த ட்ரிக்ஸ்களைப் பற்றிப் பார்ப்போம்.

சரியான உள்ளாடைகள்:

உள்ளாடைகளில் ஷேப்வியரைப் (Shapewear) பயன்படுத்துங்கள். ஏனெனில் ஷேப்வியர் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளை வடிவாகக் காண்பிக்கும். அதேபோல் மற்ற உள்ளாடைகள் என்றால் சற்று நீளமாகவும், மடிப்பில்லாத அளவுக்கொண்ட உள்ளாடைகளையும் அணிவது அவசியம்.

கருப்பு நிற ஆடைகள்:

பொதுவாக அனைவரும் அவரவர்களுக்குப் பிடித்த வண்ணத்தையும் தங்கள் நிறத்திற்கு ஏற்ற வண்ணங்களையும் தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஆடை நிபுணர்கள் கருப்பு நிற உடைகள் உடலை ஒல்லியாகக் காண்பிக்கும் என்று கூறுகிறார்கள்.   

அடுக்கடுக்கான ஆடைகள்:

ஒரு முழு கௌனைவிட, ஜீன்ஸ், டாப், இடுப்பில் ஒரு ஸ்டைலிஷ் துணி ஆகியவற்றை உடுத்தும்போது அவை உங்களை ஒல்லியாக காண்பிக்கும். இந்த ஃபேஷன் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற நிறைய துணிகளை உடுத்தி அடுக்கடுக்கான ஆடை முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

உயரமான ஜீன்ஸ்:

உயரமான ஜீன்ஸ் மற்றும் ஸ்கின்னி ஜீன்ஸ் அணியும்போது உங்களின் கால்கள் உயரமாக இருப்பதுப் போல காண்பிக்கும். ஆகையால் பலாசோ மற்றும் தளர்வாக இருக்கும் ஜீன்ஸ்களைத் தவிர்த்துவிடுங்கள்.

கோடு போட்ட ஆடைகள்:

கிடைமட்ட கோடுகள் போட்ட ஆடைகள் அணிவதால் நீங்கள் குள்ளமானவராகத் தெரிவீர்கள். ஆகையால், செங்குத்தான கோடுகள் போட்ட ஆடைகளை அணியுங்கள். இது உங்களை உயரமானவராகவும், ஒல்லியானவராகவும் காண்பிக்கும்.

தளர்வான ஆடைகள்:

சற்று தளர்வான சட்டைகள் போன்ற ஆடைகளை அணிந்துக்கொள்ளலாம். அதேபோல் சட்டையை டக் செய்து அணிவதால் ஒல்லியான தோற்றத்தைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
அழகும் தருமா மரத்துப் பிசின்கள்?
Fashion Trends

உடல் தோரணை:

இவையனைத்தையும் விட மிகவும் முக்கியமானது உடல் தோரணை. ஆடைகளை அணிந்துவிட்டு முதுகுக் குணிந்தப் படி நடந்தீர்கள் என்றால் அது உங்களின் லுக்கையே கெடுத்துவிடும். ஆகையால் முதுகு நேராக இருக்கும்படி நடந்துச் செல்லுங்கள்.

இவையனைத்தையும் நினைவில்கொண்டு ஆடைகள் அணிந்து நேராக நடந்தீர்கள் என்றால் கட்டாயம் நீங்கள் மற்றவர்கள் கண்ணுக்கு மிகவும் ஒல்லியாகத்தான் தெரிவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com