
உங்கள் முடி பலவீனமாகி கொட்டுகிறதா. எந்த கெமிகலும் இல்லாத இயற்கை தயாரிப்பாக அதுவும் உங்கள் சமயலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செய்யலாம். இந்த தலைமுடி மாஸ்க் தயாரிக்க உங்களுக்குத் தேவையானவைகள், ஆலோவேரா, சிவப்பு வெங்காயம், காபி மற்றும் விளக்கெண்ணைதான். இந்த தயாரிப்பு ஹார்மோன் சமச்சீரின்மைமை போக்கி இயற்கையாக முடிவளர உதவும்.
ஆலோவேரா
தலைமுடிக்கு இயற்கை அளித்த கொடைதான் ஆலோவேரா. இதில் பல வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் enzymes இருப்பதால் அரிப்பை நீக்கி மற்றும் முடியின் பிளவுகளை போக்கி நல்ல நீரேற்றம் தந்து முடி வளர்ச்சியைத் தூண்டும். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைக்கும். தலையிலிருந்து செதில் செதிலாக உதிருவதை தடுக்கும்.
சிவப்பு வெங்காயம்
இதில் சல்ஃபர் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளதால் வெங்காய ஜுஸ் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வேர்க்கால்களை வலுவாக்கும். வேர்க்காலில் முடி வலுவாக இருக்கும் இது முடி உதிர்வதை தடுக்க இயற்கையான வழிமுறையாகும். மேலும் தலையில் தொற்று மற்றும் பூஞ்சைகளை நீக்கும்.
காஃபி
நீங்கள் தூங்கி எழுந்ததும் உங்களை புத்துணர்வுடன் வைக்கும் காஃபி. அத்தோடு உங்கள் முடியையும் ஆரோக்கியமாக இது வைக்கும். இதிலுள்ள காபின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இதனால் வேர்க்கால்களுக்கு நல்ல ஊட்டச்சத்து போய் சேருகிறது. அதுமட்டுமல்ல முடிக்கு பளபளப்பையும் அளிக்கிறது. இது தலையில் எக்ஸ்ஃபோலியேட் செய்து முடி வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. ஆரோக்கிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
விளக்கெண்ணெய்
இதன் கொழுப்பு அமிலங்கள் தலையில் ஊடுருவி முடியை ஈரப்பதத்தோடு வைப்பதுடன் முடியை அடர்த்தியாகவும் ஆக்குகிறது. முடிப்பிளவை நீக்கி அழற்சியை போக்கி, பொடுகு பிர்ச்னையை நீக்கி மிக ஆரோக்கியமாக வைக்கிறது
எப்படி தயாரிப்பது?
தேவையானவை:
ஆலோவேரா ஜெல். 2டேபிள் ஸ்பூன்
ஒரு சிவப்பு வெங்காயம் ஜுஸ்
காஃபி பௌடர் 1டேபிள் ஸ்பூன்
விளக்கெண்ணெய் 1டேபிள் ஸ்பூன்
ஆலோவேரா நன்கு மென்மையாக அரைக்கவும்
சிவப்பு வெங்காய ஜுசை நன்கு வடிகட்டி வைக்கவும்.
ஒரு பௌலில் இரண்டையும் கலக்கவும். பிறகு காபி பௌடர் மற்றும் விளக்கெண்ணை சேர்த்துக் கலந்து வைக்கவும்.
உங்கள் தலைமுடியில் நன்றாக விரல்கள் மூலம் வட்ட வடிவமாகத் தடவவும். தலை முழுவதும் தடவவும் ஷவர் கேப் போட்டுக் கொள்ளவும். இந்த கலவை உங்கள் முடியை நன்கு ஊடுருவ 45நிமிடம் வைக்கவும். பிறகு சல்ஃபர் கலக்காத ஷாம்பூ வாஷ் அலசவும் வாரத்தில் இருமுறை இப்படிச்செய்ய அடர்த்தியான முடியை காண்பீர்கள்.