ஐப்ரோ த்ரெட்டிங் என்பது நம்முடைய புருவத்தின் முடியை சரியான முறையில் அகற்றி, புருவங்களை அழகாக வளைத்து வடிவமைக்கும் ஒரு பாரம்பரிய மற்றும் மிகவும் பயனுள்ள அழகுக் கலையின் ஓர் அம்சமாகும். இந்தப் பழங்காலச் சீர்ப்படுத்தும் முறையானது, புருவங்களில் உள்ள தேவையற்ற முடிகளை நேர்த்தியான வடிவில் அகற்றுவதற்கு பருத்தி நூலின் ஒற்றை இழையைப் பயன்படுத்துகிறது. இதன்மூலமாக குறைவான நேரத்திற்குள் நாம் நன்கு வரையறுக்கப்பட்ட புருவங்களை அடையலாம்!
தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட பல்வேறு கலாச்சாரங்களில் இத் திரித்தல்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது. தனிநபர்கள் இந்தக் கலையை இளம் வயதிலேயே குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
த்ரெட்டிங்கில் இருக்கும் தொழிற்நுட்பம் மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன?
பருத்தி நூலை புருவத்தின் முடி இருக்கும் சருமப் பகுதியின் மேற்பரப்புடன் முறுக்கி அதனை உருட்டியவாறு, நூலில் உள்ள முடிகளை வளைத்து, அவற்றின் நுனிப்பகுதியில் இருந்து வேகமாக உயர்த்துவதன் மூலம்தான் த்ரெடிங் நடக்கிறது. இந்த முறையானது வாக்சிங்போல இருக்காது. மேலும், இது நம்முடைய சருமத்தை உரிக்கவோ அல்லது காயப்படுத்தவோ செய்யாது. மிக மென்மையான மிருதுவான (Sensitive skin) சருமம் உள்ள நபர்களுக்கு த்ரெட்டிங் விருப்பமான தேர்வாக அமைகிறது. மேலும் தடித்த மற்றும் அடர்த்தியான புருவங்களைக்கொண்ட நபர்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இது சரும எரிச்சல் அல்லது காயங்கள் ஏதும் இல்லாமல் நம்முடைய தேவையற்ற முடிகளை திறமையான முறையில் நீக்க உதவுகிறது. நன்கு வரையறுக்கப்பட்ட புருவங்களுடன் வசீகரத் தோற்றத்தை விரும்பும் நபர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
செயல்முறை மற்றும் பராமரிப்பு
சராசரியாக ஒரு த்ரெடிங் அமர்வின்போது, சருமத்தை மரத்துப்போக மற்றும் வலியைக் குறைக்க அழகியல் நிபுணர்கள் பருத்தி உருண்டையால் அந்தப் பகுதியை துடைத்து முதலில் தயார் செய்துகொள்கின்றனர். அடுத்ததாக த்ரெடிங்கிற்குப் பிறகு, நம்முடைய சருமத்தை அமைதிப்படுத்தவும், சிவத்தல் அல்லது எரிச்சலைத் தடுக்கவும் ‘ஜில்’ என்ற லோஷன் அல்லது ஆண்டிபயாடிக் கிரீம் த்ரட்டிங் செய்யப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்த த்ரெடிங் முறையானது 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கும். மற்ற முடி அகற்றும் முறைகளுடன் ஒப்பிடும்போது இது நமக்கு நீண்ட காலத் தீர்வை வழங்குகிறது.
பரிசீலனைகள்
நன்கு வரையறுக்கப்பட்ட புருவங்களை அடைவதற்கு ஐப்ரோ த்ரெடிங் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும்கூட, மிக மென்மையான, பஞ்சுபோன்ற சருமம் கொண்ட நபர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது என சொல்லப்படுகிறது. மிக தொன்மை வாய்ந்த சருமம் உள்ளவர்கள், த்ரெடிங் செய்து முடித்தபிறகு தேயிலை மர எண்ணெய் (Tea tree oil) அல்லது கற்றாழை பயன்படுத்திக்கொள்ளலாம். இவை இரண்டும் ஏதேனும் எரிச்சலோ அல்லது சருமம் சிவந்துபோகும் நிலை ஏற்பட்டாலோ அதை இயற்கையான முறையில் தணிக்க உதவுகிறது.
த்ரெடிங் ஏன் அதிகப்படியானோரின் தேர்வாக இருக்கிறது?
த்ரெடிங் என்பது பாதுகாப்பான மற்றும் இயற்கையான முடி அகற்றும் நுட்பமாகும். இதில் எந்தவொரு ரசாயனங்களோ, சாயங்களோ அல்லது கூர்மையான பொருட்களோ பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, இது பலருக்கும் விருப்பமான தேர்வாக அமைகிறது. அதோடு பல்வேறு கலாச்சாரங்களில் அதன் பயன்பாடு ஆழமாக வேரூன்றியிருப்பதால், விரைவான, பயனுள்ள மற்றும் சருமத்திற்கு ஏற்ற முறையைத் தேடும் நபர்களுக்கு த்ரெடிங் ஒரு பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது.