பூலோகத்தின் சொர்க்கம்; பூக்களின் பள்ளத்தாக்கு எங்குள்ளது தெரியுமா?

பூக்களின் பள்ளத்தாக்கு ...
பூக்களின் பள்ளத்தாக்கு ...
Published on

ந்த கோடை வெயிலுக்கு அருவி, தீவு, கடற்கரை என்று சென்றது போதும், இனி கண்களுக்கு குளிர்ச்சியாக நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஒன்று இந்தியாவில் உள்ளது, அதுதான் பூக்களின் பள்ளத்தாக்கு. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இங்கு 600 வகையான பூக்கள் பூக்கும் செடிகளும், பூக்கள் பூக்காத செடிகளும் மேலும் மருத்துவ குணம் கொண்ட அரியவகை செடிகளும் உள்ளது. இந்த பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை 1982ல் உருவாக்கினார்கள்.

உத்திரகாண்ட்டில் சமோலி மாவட்டத்தில் உள்ளது இந்த பூக்களின் பள்ளத்தாக்கு. இங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக பல நிற வண்ணங்களில் மலர்கள் அழகாக காட்சியளிக்கிறது. இது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் போன தேசிய பூங்காவாகும். இந்த பள்ளத்தாக்கு கடற்மட்டத்திலிருந்து 3352 முதல் 3658 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வருடாவருடம் இங்கே நிறைய சுற்றுலாப்பயணிகளும், மலையேற்றம் செய்பவர்களும் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இங்கே மலையேற்றம் செய்வது சற்று கடினமானது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் பூக்களின் அழகை காணும் போது எல்லா கஷ்டங்களும் பறந்து விடும் என்கின்றனர் சுற்றுலாப்பயணிகள். இங்கே ஆர்சிட், பாப்பிஸ்,மாரி கோல்ட், டெய்ஸி போன்ற கண்களுக்கு அழகான பூக்களும் உள்ளது. இங்கே மலையேற்றம் செய்ய சரியான நேரம், ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களாகும். கோவிந்த்காட்-காங்கிரியா- பூக்களின் பள்ளத்தாக்கு இதுவே இங்கு செல்வதற்கு சுலபமான மலையேற்ற பாதையாக கருதப்படுகிறது. இங்கே செல்ல ஒருவருக்கு  ரூபாய் 150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

1931 ஆம் ஆண்டு மூன்று பிரிட்டிஸ் மலையேற்றம் செய்பவர்கள் காமெட் மலையை வெற்றிகரமாக ஏறிவிட்டு திரும்பும் போது வழித்தவறி இந்த பள்ளத்தாக்கை வந்தடைந்தனர். இந்த பள்ளத்தாக்கின் அழகை பார்த்துவிட்டு அவர்களே ‘பூக்களின் பள்ளத்தாக்கு’ என்று இவ்விடத்திற்கு பெயர் வைத்தனர். அந்த மூவரில் ஒருவரான ஸ்மித் ‘பூக்களின் பள்ளத்தாக்கு’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூக்களின் பள்ளத்தாக்கு ...
பூக்களின் பள்ளத்தாக்கு ...

உலகம் முழுவதிலிருந்தும் மலையேற்றம் செய்பவர்களும், சுற்றுலாப்பயணிகளும் இங்கே வந்தவண்ணம் உள்ளனர். இயற்கை அழகு, மலையேற்றம் செய்வது, அரியவகை பூக்கள், புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடம், இமாலயத்தின் அழகு போன்றவை சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கிறது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் சூட்டை தணிக்கும் மகத்துவம் மிக்க 6 கீரைகள்!
பூக்களின் பள்ளத்தாக்கு ...

ஒவ்வொரு 15 நாட்களும் இந்த பள்ளத்தாக்கில் உள்ள பூக்கள் நிறம் மாறுமாம். இங்கு பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளின் அழகை ரசிக்கலாம். பனி சூழ்ந்த மலைகளைக் கண்டு களிக்கலாம். இங்கு வருவதற்கு முன் வானிலை, காலநிலை மாற்றங்களை பற்றி தெரிந்து கொண்டு வருவது சிறந்ததாகும்.

பூக்களின் பள்ளத்தாக்கு பூலோகத்தின் சொர்க்கம் என்று சுற்றுலாப்பயணிகளால் அழைக்கப்படுகிறது. வாழ்வில் ஒருமுறையாவது தவறாமல் இவ்விடத்திற்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com