ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் நெய் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, உணவில் சேர்க்கப்படும் நெய் நெய் உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதுடன், அழகு சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகப்பொலிவுக்காண இயற்கை வைத்தியமாக நெம் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், இது உண்மையிலேயே சரியானதுதானா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இந்தப் பதிவில் நெய்யை முகத்தில் பயன்படுத்துவதன் நன்மை தீமைகளை விரிவாகப் பார்க்கலாம்.
நெய்யின் சிறப்பம்சங்கள்: நெய் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்து வறட்சியை தடுக்கிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. நெய்யில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.
நன்மைகள்:
நெய் சருமத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இது வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள், பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.
நெய் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது. குறிப்பாக, இதை உதட்டில் பயன்படுத்தும்போது விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. தொடர்ச்சியாக நெய்யை கண்களுக்கு கீழ் தடவி வந்தால், கருவளையங்கள் குறையும். இதில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் முகத்தில் உள்ள வடுக்களை குறைக்க உதவும்.
தீமைகள்:
சிலருக்கு நெய்யால் அலர்ஜி ஏற்படலாம். எனவே, முகத்தில் நெய்யை தடவுவதற்கு முன் அது உங்களுக்கு சரியானதுதானா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். கொழுப்பு சருமம் உள்ளவர்கள் மிக அதிகமாக நெய்யை பயன்படுத்துவதை தவிர்க்கவும். வெய்யில் காலங்களில் நெய்யை முகத்தில் பயன்படுத்தும்போது சன் ஸ்கிரீன் மறக்காமல் பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.
நெய் முகப்பொலிவை அதிகரிக்கும் இயற்கையான வரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும், எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. நீங்கள் நெய்யை சரியான முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளைப் பெறலாம். ஆனால், அதிகப்படியாக பயன்படுத்தும்போது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.