இந்த 5 பிரச்சனைகள் இருப்பவர்கள் நெய் சாப்பிட்டால் அவ்வளவுதான்! 

Ghee
Ghee

நெய் நம் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பொருள். இது சுவையை மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இருப்பினும், சில உடல் நல பாதிப்புகள் உள்ளவர்களுக்கு நெய் சாப்பிடுவது ஆபத்தானதாக மாறலாம். 

யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது?

அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் உள்ளவர்கள்: நெய்யில் அதிக அளவு கொழுப்பு நிறைந்துள்ளது. எனவே ஏற்கனவே உயர்கொலஸ்ட்ரால் அல்லது இதய நோய் உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள்: நெய் கல்லீரலில் சுத்திகரிக்கப்படுகிறது. எனவே ஏற்கனவே மஞ்சள் காமாலை அல்லது கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தானதாக மாறலாம். 

செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள்: நெய் செரிமானப் பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். எனவே அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை கொஞ்ச நாளைக்கு நிறுத்துவது நல்லது. 

பால் ஒவ்வாமை உள்ளவர்கள்: நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே ஏற்கனவே பால் ஒவ்வாமை இருப்பவர்கள் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

கர்ப்பிணி பெண்கள்: சில ஆய்வுகள் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு நெய் சாப்பிடுவது குறைந்த எடை கொண்ட குழந்தை பிறப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணெயாக மாறும் அதிசய சிவன் கோயில்!
Ghee

எவ்வளவு நெய் சாப்பிடலாம்? 

எப்போதுமே நெய் என்பது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். எனவே அதை மிதமாக உட்கொள்வது அவசியம். பொதுவாக ஆரோக்கியமான நபர்கள் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன் நெய் வரை சாப்பிடுவது பாதுகாப்பானது. அல்லது நெய்க்கு பதிலாக மற்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். 

இதுதவிர உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சேர்க்கவும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நெய் உங்களுக்கு பாதுகாப்பானதா என்பதை அறிய உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com