பண்டைய காலத்தில் இருந்தே அழகு சாதனங்களில் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அவற்றில் வெல்லம் முக்கியமான இடம் வகிக்கிறது. இனிப்பு சுவையுடன் பல சத்துக்கள் நிறைந்த வெல்லம், முகம் பொலிவு பெறவும், பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் பயன்படுகிறது. இந்தப் பதிவில் வெல்லத்தை எப்படி முக அழகுக்காக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வெல்லத்தின் சரும நன்மைகள்:
வெல்லத்தில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. அவை சருமத்தை சேதப்படுத்தும் மூலக்கூறுகளுடன் போராடி, வயதான தோற்றத்தை தடுக்க உதவுகின்றன.
வெல்லம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் இயற்கையான மாய்ஸ்ரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும செல்களை புதுப்பிக்கவும், மென்மையான மற்றும் பொலிவு மிக்க தோற்றத்தை அளிக்கவும் உதவுகின்றன.
வெல்லத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பருக்கள் மற்றும் சரும எரிச்சல் போன்ற தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைக்கவும் வெல்லம் உதவுகிறது.
முகம் பொலிவு பெற வெல்லத்தை பயன்படுத்தும் முறைகள்:
வெள்ளம் மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்!
இதை செய்வதற்கு ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும். ஒரு சிறிய கிண்ணத்தில் வெள்ளம் மற்றும் எலுமிச்சை சாறு ஒன்றாக சேர்த்து கலக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
வெல்லம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்!
இதை செய்வதற்கு ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் ஒரு ஸ்பூன் தேனை நன்றாக கலக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். பின்னர் அரை மணி நேரம் அப்படியே ஊற வைத்த பின்னர், தண்ணீரில் கழுவினால் இயற்கையான பளபளக்கும் முகம் உங்களுக்குக் கிடைக்கும்.
வெல்லம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்!
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், வெந்நீரில் முகத்தை கழுவினால் முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வெல்லத்தை உங்களது சருமத்திற்கு பொலிவூட்ட பயன்படுத்தலாம். வெல்லத்தை எப்போதும் ஃபேஸ் பேக் போல பயன்படுத்துவது நல்லது. மற்ற கலவைகளுடன் சேர்த்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், அது மற்ற ரசாயனங்களுடன் வினைபுரிந்து சருமத்திற்கு பாதிப்பை உண்டாக்கக் கூடும் என்பதால், வெல்லத்தை லேசாக பயன்படுத்துவதே நல்லது.