மங்களூரில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பாசிப்பருப்பு தோவ் பற்றி சொல்ல தேவையில்லை. பாசிப்பருப்பை வைத்து பாரம்பரியமாக கொங்கனி ஸ்டைலில் செய்யப்படும் பிரபலமான சைட் டிஷ்ஷாகும். இது மிகவும் சுலபமாக செய்யக்கூடியதாக இருந்தாலும் அல்டிமேட் சுவையில் இருக்கும். அத்தகைய சிம்பிள் ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
மங்களூர் பாசிப்பருப்பு தோவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- 1கப்
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-1
உப்பு- தேவையான அளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
பெருங்காயம்-1 தேக்கரண்டி.
கடுகு-1/2 தேக்கரண்டி.
ஜீரகம்-1/2 தேக்கரண்டி.
வெள்ளை உளுந்து- ½ தேக்கரண்டி.
வெந்தயம்-1/2 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
வெல்லம்-1 சிட்டிகை.
புளி கரைச்சல்- சிறிதளவு.
நெய்-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
மங்களூர் பாசிப்பருப்பு தோவ் செய்முறை விளக்கம்;
முதலில் குக்கரில் 1 கப் பாசிப்பருப்பு, 1 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, 2 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 3 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.
இப்போது இறக்கியதும் 2 கப் தண்ணீர் ஊற்றி, 1 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு கடுகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, வெள்ளை உளுந்து ½ தேக்கரண்டி, வெந்தயம் ½ தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து ஊற்றவும். இத்துடன் கடைசியாக புளிப்பிற்காக புளி சிறிதறவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும், வெல்லம் 1 சிட்டிகை, கொத்தமல்லி தூவி, நெய் 1 தேக்கரண்டி விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து பரிமாறவும். இதை சப்பாத்தி, தோசை, பூரின்னு எதற்கு வேண்டுமோ வைத்து சாப்பிடலாம். இந்த கிரேவி டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
பனை வெல்லம் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்;
பாசிப்பருப்பு-1 கப்.
ஜவ்வரிசி-1/2கப்.
ஏலக்காய்-2
பனை வெல்லம்-1/2 கப்.
முந்திரி-10
திராட்சை-10
நெய்- 4 தேக்கரண்டி.
தேங்காய் பால்-2 கப்.
பனை வெல்லம் பாயசம் செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு ஃபேனில் 1 கப் பாசிச்சருப்பு வறுத்து கொள்ளவும். இப்போது அத்துடன் ½ கப் ஜவ்வரிசி தேர்த்து வறுத்து கொள்ளவும். இத்துடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும்.
இப்போது இன்னொரு பாத்திரத்தில் பனை வெல்லம் ½ கப் தண்ணீர் விட்டு கரையும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது பருப்பு வெந்ததும் அதில் பனை வெல்லத்தை சேர்த்து ஏலக்காய் 2 தட்டி சேர்த்து கொள்ளவும். இப்போது அடுப்பில் நெய் 4 தேக்கரண்டி சேர்த்து அதில் முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதையும் பாயசத்துடன் சேர்த்து இறக்கவும். இப்போது கடைசியாக 2 கப் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பனை வெல்லம் பாயசம் தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.