அடிக்கிற வெயில்ல ஜீன்ஸா? அச்சச்சோ..!

Jeans in the scorching sun?
jeans in summer
Published on

னைவரும் விரும்பி அணியும் ஆடையாக ஜீன்ஸ் இருக்கிறது. நல்ல தோற்றத்துடன் அவுட்லுக்கை  கொடுப்பதாலும், எளிதாக எங்கு வேண்டுமானாலும் அணியக்கூடிய ஆடையாக ஜீன்ஸ் இருப்பதால் மேலாடை, பேண்ட், ஸ்கர்ட் என பலவிதங்களில் அணிகின்றனர். ஆனால் கோடைக்காலத்தில் ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

அந்தரங்க உறுப்புகளுக்கு சேதம்

ஜீன்ஸ் ஆடைகள் கடினமாக இருப்பதால் வெயில் காலத்தில் உடலில் காற்று உலா வருவதை கடினமாக்குகிறது .இதனால் அந்தரங்க உறுப்புகள் காற்றோட்டம் இல்லாமல் கதகதப்பாக இருப்பதோடு, வியர்வை மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது .இந்தப் பிரச்னையின் தீவிரம் அதிகமானால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்பாக அமைவதோடு பெண்களின் உறுப்புகளிலும் Ph அளவை பாதிக்கிறது .

பிறப்புறுப்பு தொற்று ஏற்படும் அபாயம்

கோடைகாலத்தில் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடை அணிவதால் பிறப்புறுப்பு பகுதியில் சரியான காற்று சுழற்சி இல்லாமல் பிறப்புறுப்பு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகும். இதனால் எரிச்சல் ஏற்பட்டு இது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் பூஞ்சை உருவாவதற்கும் வழிவகுத்து அரிப்பு போன்ற சங்கடம் தரும் உணர்வை உண்டாக்குவதால் கோடை காலத்தில் ஜீன்ஸை தவிர்க்க வேண்டும்.

பூஞ்சை தொற்று பிரச்னை

கோடைகாலத்தில் கடினமாக உள்ள ஜீன்ஸ் காற்று சுழற்சியை தடுப்பதால் சருமத்திலும் மூட்டு பகுதிகளிலும் அதிகப்படியான வியர்வை ஏற்படுவதோடு, இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட்டு புண்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன .

சுகாதாரம் குறைவு

கடினமான ஆடையாக இருக்கும் ஜீன்ஸை துவைப்பது கடினம் என்பதால் அழுக்கை முழுமையாக நீக்கி துவைக்க முடியாமல் போகலாம். இதனால் சருமத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி போதிய சுகாதாரமின்மை  காரணமாக பாக்டீரியா பூஞ்சை வளர்ச்சி அடைவதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
எள்ளுப் பூ மூக்கு சொல்லும் லட்சண சாஸ்திரம்!
Jeans in the scorching sun?

மணிக்கணக்கில் ஜீன்ஸ் அணிபவரா:

கோடையில் ஸ்டைல் அல்லது ஃபேஷனுக்காக ஜீன்ஸ் அணிந்தாலும் மணிக் கணக்கில் தொடர்ந்து அணியாமல் சில மணி நேரங்களிலேயே மாற்றிவிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் சோர்வு:

நீண்ட தூர பயணங்களின்போது இறுக்கமான ஜீன்ஸ் அணிவது கால்களை சோர்வடையச் செய்து ஒவ்வாமை மற்றும் அரிப்பை ஏற்படுத்துவதோடு, கால்களை வியர்வையால் நனைக்கும் என்பதால் ஜீன்ஸ்க்கு பதில் காட்டன் உடைகளை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது .

ஒட்டுமொத்தமாக எல்லாவிதங்களிலும் கோடையில் ஜீன்ஸ் அணிவது பொருத்தமற்றதாக இருப்பதால் கோடை காலத்திற்கு ஏற்ற பருத்தி ஆடைகளை அணிவதே மிகவும் சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com