உங்க கண்ணுக்கு எந்த காஜல் செட் ஆகும்னு தெரியாம இனிமே காச கரியாக்காதீங்க!

kajal
Kajal
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

பெண்களின் முகத்தில் மிக அழகான உறுப்பு கண்கள் தான். அந்த கண்களை மேலும் அழகாக்க பலரும் பயன்படுத்தும் ஒரு முக்கியமான மேக்கப் பொருள் காஜல். காலேஜ் செல்லும் பெண்களில் ஆரம்பித்து ஆபீஸ் செல்லும் பெண்கள் வரை எவர் பேக்கிலும் கட்டாயம் ஒரு காஜல் பென்சில் இருக்கும். ஆனால் கடைகளில் எக்கச்சக்கமான பிராண்டுகளில் இது கிடைப்பதால், நமது கண்களுக்கு எந்த வகையான காஜல் செட் ஆகும் என்பதை தேர்ந்தெடுப்பது சற்று குழப்பமான விஷயம்தான். 

அப்படி உங்களுக்கு ஏற்ற சரியான காஜலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

வாட்டர் ப்ரூப் காஜல்!

நாம் காலையில் அழகாக காஜல் போட்டுக்கொண்டு வெளியே சென்றால், சில மணி நேரங்களிலேயே அது அழிந்து கண்கள் சுற்றி ஒரு பெரிய கரு வளையம் போல மாறிவிடும். வெயில் மற்றும் முகத்தில் வடியும் எண்ணெய் பசை தான் இதற்கு முக்கிய காரணம். இதனை தவிர்க்க, நீங்கள் காஜல் வாங்கும் போது அதன் அட்டைப்பெட்டியில் Smudge-proof மற்றும் Waterproof என்று குறிப்பிடப் பட்டுள்ளதா என்பதை அவசியம் கவனித்து வாங்குங்கள். இவை நாள் முழுவதும் எந்த ஒரு கலங்கலும் இல்லாமல் கண்களை ரொம்ப பிரெஷ்ஷாக காட்டும்.

கெமிக்கல் இல்லாத இயற்கை காஜல்!

கண்கள் மிகவும் சென்சிட்டிவான ஒரு பகுதி என்பதால், அதில் பயன்படுத்தும் பொருட்களில் அதிக கவனம் தேவை. விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு லோக்கல் பிராண்டை வாங்கி பயன்படுத்தக் கூடாது. பாரபென் மற்றும் லெட் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் கலக்காத காஜலை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். முடிந்தவரை பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்த இயற்கையான மூலிகைகளால் செய்யப்பட்ட காஜலை வாங்குவது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது கண்களில் எரிச்சல் வருவதை தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
கண்களை அழகாக்க காஜல் போட்டுக்கிறீங்களா? அப்போ இத படிங்க!
kajal

அடர்த்தியான நிறம்!

ஒரு நல்ல காஜல் என்பது கண்களில் வரையும்போது மிகவும் மென்மையாக சறுக்கிக்கொண்டு செல்ல வேண்டும். பென்சிலை வைத்து கண்களில் அழுத்தி வரைவது சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும். மேலும், ஒரு முறை வரையும் போதே அந்த காஜல் நல்ல அடர்த்தியான கருப்பு நிறத்தை கொடுக்கிறதா என்பதை செக் செய்து வாங்குங்கள். ஜெட் பிளாக் எனப்படும் அதீத கருப்பு நிறம் கொண்ட காஜல் உங்களின் கண்களை ரொம்பவே எடுப்பாகவும் வசீகரமாகவும் காட்டும்.

காஜல் வகைகளில் எது சிறந்தது?

சந்தையில் பென்சில், ரோல்-ஆன், ஜெல் மற்றும் லிக்விட் என பல வடிவங்களில் காஜல் கிடைக்கிறது. தினசரி பயன்பாட்டிற்கும், அவசரமாக கிளம்பும் நேரத்திற்கும் ரோல்-ஆன் அல்லது பென்சில் வகை காஜல்கள் தான் மிக சிறந்த சாய்ஸ். ஜெல் மற்றும் திரவ வடிவத்தில் இருக்கும் காஜல்களை பயன்படுத்த கொஞ்சம் பொறுமையும், மேக்கப் போடுவதில் ஓரளவு அனுபவமும் தேவைப்படும். எனவே, உங்கள் வசதிக்கு ஏற்ப சரியான மாடலை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
கூட்டத்தில் இருந்தாலும் தனிமையா? இந்த 15 வாசகங்கள் உங்கள் வலியை போக்கும்!
kajal

உங்கள் கண்களுக்கு எந்தப் பிரச்னையையும் தராத, நீண்ட நேரம் கலையாமல் இருக்கும் ஒரு நல்ல பிராண்ட் காஜலை வாங்கி பயன்படுத்துங்கள். அதே சமயம், இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கண்களில் உள்ள காஜலை தேங்காய் எண்ணெய், மேக்கப் ரிமூவர் பயன்படுத்தி முழுமையாக துடைத்து எடுப்பது மிக மிக முக்கியம்.

logo
Kalki Online
kalkionline.com