ஷேப்வேர் (shape wear) அணியும் முன் அதன் சாதக பாதகங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Fashion shape wear...
Fashion shape wear...Image credit - outhindiafashion.com
Published on

ளவயதுக்காரர்கள் முதல் நடுத்தர வயதுக்காரர்கள் வரை தற்போது ஷேப்வேர் எனப்படும் உடலை ஒட்டியது போன்ற உள்ளாடைகள் மற்றும் சட்டைகள் டி-ஷர்ட்டுகள் ஜீன்ஸ்கள் போன்ற ஆடைகளை அணிவது ஃபேஷனாக இருக்கிறது. இதை அணிவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஷேப்வேர் அணிவதன் சாதக பலன்கள்;

ஷேப்வேர் வயிறு இடுப்பு தொடைகள் போன்ற பகுதிகளை அழுத்துவதன் மூலம் மென்மையான மற்றும் வடிவான உடல் தோற்றத்தை உருவாக்க முடியும். கீழ் முதுகு மற்றும் வயிற்று தசைகளை  இறுக்கிப்பிடிப்பதால் பருமனான் உடல்வாகு கூட சற்றே ஒல்லியானது போன்ற தோற்றம் அளிக்கும். இவற்றை அணியும் போது குறிப்பாக விஷேச சந்தர்ப்பங்களின் போது, அதிக நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடன் உணர் கிறார்கள். இளம் வயதுக்காரர்கள் இவற்றை அணிவதால் தாங்கள் அழகாக இருப்பது போல் தோன்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்கள்.

எதிர்மறை விளைவுகள்

1.  கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம்;

வயிறு மற்றும் விலா எலும்புகளை அழுத்துவது போன்ற இறுக்கமான ஷேப்வேர் அணிவதால் ஆழ்ந்த சுவாசம் எடுப்பதையும், இயல்பாக மூச்சுவிடுவதையும் கடினமாக்கும். மேலும் உடல் அசௌகரியத்தை தரும். மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.

2. செரிமான சிக்கல்;

வயிற்றில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்சு எரிச்சல் மற்றும் செரிமானத்தின் போது அசௌகரியமான உணர்வு தோன்றக்கூடும்.

3. குறைக்கப்பட்ட ரத்த ஓட்டம்; அதிக இறுக்கமான ஷேப்வேர்களை நீண்ட நேரம் அணிவது ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இது அழுத்தப்பட்ட பகுதிகளில் உணர்வின்மை அல்லது கூச்சத்தை ஏற்படுத்தும் இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கால்களில் ரத்தம் ரத்த ஓட்டம் தடைப்படும் அதனால் நரம்புகள் பருத்து வீங்கி வலிக்க ஆரம்பிக்கும். 

3. தோல் நோய்கள்;

இறுக்கமான துணிகள் உராய்வை ஏற்படுத்தும். இது அரிப்பு தடிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும் குறிப்பாக இடுப்பு அல்லது அக்குள் போன்ற உணர்திறன் வாய்ந்த பகுதிகளில். இறுக்கமாக உடை அணிவதால் வியர்வை அதிகமாகி பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்றுக்கு வழிவகுக்கும். இது தேமல் படை மற்றும் சரும பிரச்சனைகளை உருவாக்கும். கேட்பவர்களை நீண்ட காலம் அணிந்து இருப்பது உடலின் மையத் தசைகளை பலவீனமடைய வைக்கும். ஏனென்றால் உடல் அதன் சொந்த தசைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக வெளிப்புற ஆதரவை சார்ந்திருக்கும் நிலை உருவாகும்.

4. நரம்பு சுருக்கம்;

இறுக்கமான ஷேப்வேர்கள் நரம்புகளை சுருக்கும். இது மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும். இது கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் கால்களில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.

ஷேப் வேர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

1. ஷேப்வேர்களை நீண்ட நேரத்திற்கு அணிவதை தவிர்க்கவும். தினமும் அணியாமல் எப்போதாவது மட்டும் அணியலாம் அதுவும் குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு மட்டும். மூன்று மணி நேரங்களுக்கு மேல் அணியாமல் அவற்றை மாற்றி விட வேண்டும்.

2.  சரியான அளவை தேர்வு செய்யவும். ஷேப்வேர் சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மிகவும் டைட்டான ஷேப்வேர்கள் உடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
40 வயதுக்குப் பிறகு தொப்பையைக் குறைப்பது அவ்வளவு பெரிய கடினமல்ல!
Fashion shape wear...

3. தோல் எரிச்சல் அல்லது தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்க நன்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருட்களால் செய்யப்பட்ட தரமான ஷேப்வேர்கள் வாங்கவும். அவற்றை அணியும் போது ஏதேனும் சுவாசப் பிரச்னைகள், அசவுகரியம் அல்லது வலி ஏற்பட்டால் உடனடியாக அந்த உடையை மாற்ற வேண்டியது அவசியம்.

4. முடிவாக ஷேப்வேர்களை எப்போதும் அணிந்து கொண்டிருப்பது தோற்றத்தை வேண்டுமானாலும் மேம்படுத்த உதவலாம். ஆனால் அது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com