40 வயதுக்குப் பிறகு தொப்பையைக் குறைப்பது அவ்வளவு பெரிய கடினமல்ல!

தொப்பை கொழுப்பு
தொப்பை கொழுப்பு
Published on

பெண்களுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு இருந்த உடலமைப்பு திருமணம் ஆகி குழந்தைப் பேற்றுக்குப் பின்பு இருப்பதில்லை. ஆனால், பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு முன் இருந்த உடல் அமைப்பையே பெரிதும் விரும்புகின்றனர். அதிலும் 40 வயதைக் கடந்த பின்பு தொப்பை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இந்தத் தொப்பை கொழுப்புக்கு ஹார்மோன் மாற்றங்கள், ஈஸ்ட்ரோஜனின் குறைவு, உட்கார்ந்த வாழ்க்கை என பல காரணங்கள் இருக்கலாம். வயிற்றைச் சுற்றியுள்ள இந்த தொப்பை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தொப்பை கொழுப்பு ஆரோக்கியமற்ற கொழுப்பு வகைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. 40 வயதான பின்பு தொப்பை கொழுப்பை குறைக்கும் 4 வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. சீரான உணவு: நாம் உண்ணும் உணவு 40 வயதைத் தாண்டியவுடன் இடுப்பைப் பாதிக்கும். பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பது உங்கள் வீக்கத்தை அதிகரிக்கும். இதனால்தான் பெரும்பாலான பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் அதிகமாக தொப்பை போடுகிறது. அதேநேரத்தில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வதன் மூலம் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்கலாம்.

2. மன அழுத்தம்: உங்கள் எண்ணங்களும் உங்கள் தொப்பை கொழுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். மன அழுத்தமான எண்ணங்கள் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். மேலும், இது தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்வது மற்றும் உங்கள் விருப்பப்படி செயல்களைச் செய்வது, தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.

3. உடற்பயிற்சி: தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி, ஜூம்பா, நீச்சல் மற்றும் நீங்கள் விரும்பும் எந்த உடல் செயலிலும் ஈடுபடலாம்.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் பழத்தின் ‘அக்ளி சித்தி’ யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
தொப்பை கொழுப்பு

4. சரியான தூக்கம்: குறைந்த நேரம் தூங்குவது உங்கள் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் போதுமான அளவு தூங்கும்போது, உங்கள் ஹார்மோன்கள் சிறப்பாக இருக்கும். நீங்கள் நன்றாக ஓய்வெடுக்கும்போது, ​​உங்கள் உடல் செயல்பாடுகள் சீராக இயங்கி, உங்கள் மனநிலை சீராகும். இது உங்கள் தொப்பை கொழுப்பு குறைக்கவும் உதவுகிறது.

வயதை எண்ணிக்கையில் மட்டும் வைத்துக்கொண்டு நாம் நம்மை எப்பொழுதும் சுறுசுறுப்பாக, இளமையானவராக நினைத்து மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டால் திருமணத்திற்கு முன்பு இருந்த உடம்பைப் பெறுவது அவ்வளவு ஒன்றும் கடினமல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com