குன்றாத இளமைக்கும் குறையாத அழகிற்கும் கொரிய மக்கள் பின்பற்றும் 5 வகை ஆன்டிஏஜிங் பழக்கங்கள்..!

Azhagu kurippugal
korean girls beauty tips
Published on

லக மக்களில் பலர் தங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் இளமைத் தோற்றத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் பல வகையான அழகு சாதனப் பொருட்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரிய நாட்டு மக்களோ தங்கள் தினசரி வாழ்வியல் முறையில் சில ஆன்டிஏஜிங் பழக்கங்களைப் பின்பற்றியே இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாமும் அவற்றைப் பின்பற்ற என்ன செய்ய வேண்டுமென்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1.க்ளீன்சிங் ட்வைஸ்(Cleansing Twice): இரவில் படுக்கும் முன் முகத்தை இரண்டு முறை சுத்தப்படுத்துகின்றனர் கொரியன்ஸ். முதலில் முகத்தில் உள்ள மேக்கப்பைக் கலைக்க எண்ணெய்த் தன்மையுடனிருக்கும் க்ளீன்சர் கொண்டும், பிறகு தண்ணீராலான க்ளீன்சராலும் முகத்தை கழுவுகின்றனர். இதனால் சருமத்திலுள்ள துவாரங்கள் சுத்தமாகும்; சரும வெடிப்புகள் குறையும். இதனால் காற்றோட்டம் சிறப்பாக அமையும்.

2.Essences & Serums: முகத்தில் கனமான க்ரீம்களை தடவுவதற்குப் பதில், கொரியன்ஸ் லேசான எஸ்ஸன்ஸ் மற்றும் சீரம் போன்றவற்றை அடுக்குகளாக தடவி வருகின்றனர். இவற்றில் ஆன்டிஏஜிங் குணம் கொண்ட பொருட்களான ஜின்செங் (Ginseng), நத்தைகளின் உடலிலிருந்து சுரக்கும் ஒரு திரவம் (Snail mucin) மற்றும் நொதிக்கச் செய்த பொருட்களின் சாறு ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். இவை சருமத்திற்குள் விரைவாக உறிஞ்சப்பட்டு, அடிப்பகுதி வரை நீரேற்றம் பெற உதவும். ஃபைன் லைன் எனப்படும், வயதானதைக்காட்டும் மெல்லிய கோடுகள் முகத்தில் தோன்றும் முன்னே அவற்றை உள்ளுக்குள்ளேயே தோன்றவிடாமல் செய்துவிடும்.

இதையும் படியுங்கள்:
நவீன ஆடை வடிவமைப்பு - பாரம்பரிய பாராட்டின் வெளிப்பாடா? வணிக நோக்கமா?
Azhagu kurippugal

3.தினசரி சன்ஸ்கிரீன்: அது மழையோ, மேக மூட்டமோ, வெயிலோ எந்த மாதிரியான வானிலையாக இருந்தாலும் கொரிய மக்கள் தினசரி சன்ஸ்கிரீன் (SPF) உபயோகிக்கத் தவறுவதில்லை. சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்கள் சருமத்தில் பாதிப்பை உண்டுபண்ணி சீக்கிரமே உடல் முதுமையடைந்த தோற்றம் பெறச் செய்துவிடும்.

ஆகையால் தினசரி சன்ஸ்கிரீன் உபயோகிப்பதால் சருமத்தை மென்மையாகவும், பள பளப்பாகவும், நீண்ட வருடங்கள் இளமையாகவும் வைத்துப் பராமரிக்க முடியும்.

4.டீ, ப்ரோத் மற்றும் நொதித்த உணவுகள்: நுரைத்து வரும் சோடா போன்ற பானங்கள் குடிப்பதைத் தவிர்த்து கொரியன்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டீ மற்றும் எலும்புச் சாறு (Broth) போன்றவைகளை குடித்து வருகின்றனர். இவை சருமத்திற்கடியில் இருக்கும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரிகின்றன. அவர்கள் கிம்ச்சி என்னும் நொதிக்கச் செய்த உணவை விரும்பி உட்கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
காற்றில் அலைபாயும் கூந்தலை பளபளப்பாக்கும் எளிய வழிகள்..!
Azhagu kurippugal

கிம்ச்சியில் ப்ரோபயோட்டிக்குகள் அதிகம். அவை செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன. சிறப்பான செரிமானம் ஆரோக்கியமான சருமத்திற்கு  உதவுமென கொரிய மக்கள் நம்புகின்றனர்.

5.ஸ்லீப் மாஸ்க் & ஸ்கின் TLC: கொரிய மக்கள் இரவில் படுப்பதற்கு முன் ஸ்லீப் மாஸ்க் போட்டுக்கொள்ளத் தவறுவதில்லை. இதனால் சருமம் நீரேற்றம் பெறும். சிதைந்த செல்கள் சீரமைக்கப்படும். சருமம் புத்துயிர் பெற்று பள பளவென்று மின்னும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com