
இன்றைய பெண்கள் பெரும்பாலும் ஓப்பன் ஹேர்ஸ்டைலை விரும்புகின்றனர். இதற்கு ஏற்ப கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் பராமரிக்கவும் சில வழிகள்.
ஓபன் ஹேர்ஸ்டைல் பின்பற்றும் பலருக்கு கூந்தல் ஈரப்பதமாக இழக்கக்கூடும். அப்போது கூந்தல் மந்தமாகவும், முடியின் நுனியில் உடையவும் கூடும். உங்களை பின்னால் அப்படியே விடும்போது சிக்கு போட்டு கொள்ளும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் சீரம் பயன்படுத்த வேண்டும். வறண்ட ஊஞ்சலுக்கும் ஈரப்பதம் அளிப்பதற்கு சீரம் தேவைப்படும்.
சிலர் தங்கள் கூடுதல் சில்கி லுக் தரவேண்டும் என்பதற்காக ஹேர் ஸ்டைல் பயன்படுத்துகின்றனர். இந்தக் கருவிகள் வெளிப்படுத்தும் வெப்பத்திலிருந்து கூந்தலை பாதுகாக்க ஹேர் சீரம் தேவைப் படுகிறது கெரட்டின் உள்ள சீரத்தை பயன்படுத்தும்போது அது முடிக்கு ஈரப்பதம் அளித்து கூந்தலை காற்றில் அலைபாய வைக்கிறது.
கூந்தலுக்கு எண்ணெய் வைக்க பிடிக்காதவர்களுக்கு சீரம் ஒரு வரம். இது கூந்தலுக்கு மென்மைத்தன்மை அளிக்கிறது. தனித்துவமான அழகு காட்டும் பளபளப்பை தருவதுடன் மாசுக்களில் இருந்தும் கூந்தலை பாதுகாக்கிறது. கூந்தல் சேதம் அடைவதை தடுத்து முடி உதிர்வையும் குறைக்கிறது.
இன்றைய பெண்கள் வேலைக்கு செல்லும்போது தினமும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு பெரும்பாலும் ஷாம்பு பயன்பாடே அதிகம் உள்ளது. தினமும் இப்படி பயன்படுத்துவதால் கூந்தல் வறண்டு கூந்தலின் நுனிகள் பிளவுபட்டு முடி உதிர்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். இதனை தவிர்க்கவும், கூந்தல் சிக்கு போடுவதை தடுக்கவும், கூந்தல் வறட்சி பாதிப்பை போக்கவும், கூந்தலுக்கேற்ற கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முதல் வளர்ச்சியை தடுத்து இயல்பான பளபளப்பை பெறலாம்.
நன்றாக பழுத்த வாழைப்பழத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் போல கலக்கி இந்த பேஸ்ட்டை முதலில் தடவி 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது கண்டிஷனர் பயன்படுத்தி குளிக்கலாம் .இது கூந்தலுக்கு ஈரப்பதமும் பளபளப்பும் கிடைக்கும்
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தூளுடன் நான்கு டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து பேஸ்ட் போல கலக்கி, இதை தலைப்பகுதி, கூந்தல் முழுக்க தடவி லேசாக மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு அல்லது கண்டிஷனர் பயன்படுத்தி கூந்தலை அலசினால் உங்களுக்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.
வெந்தயத்தை ஊறவைத்து அதோடு வெந்தய கீரையை கலந்து விழுதாக அரைத்து அதை தலையில் நன்கு தடவி ஊறவிட்டு ,20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால் கூந்தல் பளபளக்கும். வெந்தயம் இயற்கை கண்டிஷனராக செயல்பட்டு தலை முடியை பாதுகாக்கிறது.
சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கருவேப்பிலை பொடி சேர்த்து கலக்கி இதை தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊற விட்டு பின் குளித்தால் இதைவாரம் ஒரு முறை இது போல செய்தால் கூந்தல் பளபளக்கும். வளர்ச்சி தூண்டப்பட்டு முடி கருமையாக வளரும்.
ஹேர் செட்டிங் ஸ்பிரே:
இன்றைய பெண்கள் கூந்தலை எப்போதும் அலைபாயுங்கள் விட்டு விடுவதால் அது கலைந்து மோசமான தோற்றத்தை வெளிப்படுத்தி விடும் இதனால் பலரும் கூந்தல் அலங்காரத்தில் ஹேர் செட்டிங் ஸ்பிரே பயன் படுத்துகின்றனர்.
கூந்தலை சீவிய பின்னர் குட்டி குட்டி முடிகள் கலைந்தும், அலைந்தும், டென்ஷன் அளிக்கும். இதனை தவிர்க்க அந்த முடியின் மீது செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி லுக்கை மேம்படுத்தலாம்.
சில பெண்களுக்கு முன்பக்கமாக சில முடிகள் சுருண்டு கொள்ளும் இவற்றை நேராக படிய வைக்கவும். இந்த ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.
மேலும் சில முடிகளை கர்லிங் செய்த பின்னர் அந்த முடி கலையாமல் இருக்கவும் ஸ்பிரே உதவும். ஒரு சில ஸ்பிரே பயன்படுத்தும்போது அது பளபளப்பான தோற்றத்தையும் அளிக்கிறது.