சோர்வான முகமும் சுறுசுறுப்பாகும்! கொரியன் 'அண்டர்-ஐ ப்ளஷ்' மேக்கப் ரகசியம்!

கண்களுக்கு கீழே ப்ளஷ் போட்டு இளமையான க்யூட் லுக்கை பெற எளிய வழிகள்!
ப்ளஷ் மேக்கப்
ப்ளஷ் மேக்கப்AI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கொரியன் ஸ்டைல் ப்ளஷ் மேக்கப் ஏன் இப்போது ட்ரெண்டிங்?

ண்களுக்கு கீழே ப்ளஷ் (Under-eye blush) இடுவது ஒரு பிரபலமான கொரிய மேக்கப் ட்ரெண்ட். கன்னங்களின் ஆப்பிள் (மையப்பகுதி) பகுதிக்கு பதிலாக, கண்களுக்கு மிக அருகில், கண்ணிமைகளுக்குக் கீழே பிளஷ் பூசப்படும். இது சோர்வைப் போக்கி, முகம் தூக்கலாகவும் (lifted), இளமையாகவும், அப்பாவியான அழகைத் தருவதாகவும் உள்ளது. பவுடர் பிளஷைவிட கிரீம் அல்லது லிக்விட் பிளஷ் வகைகள் இந்த லுக்கிற்கு மிகவும் பொருத்தமானவை. பிங்க் அல்லது பீச் நிறங்கள் சிறந்தவை.

வைக்கும் முறை:

கண்களின் கீழ்ப்பகுதிக்கும், மூக்கிற்கும் இடையே ஒரு 'L' வடிவத்தில் பிளஷ் புள்ளிகளை வைக்கவும். இது முகத்தின் நடுப்பகுதியை முழுமையாகவும் க்யூட்டாகவும் காட்டும்.

பிளெண்ட் செய்யும் முறை:

விரல் நுனிகளிலோ அல்லது ஒரு சிறிய பிளெண்டர் பிரஷ் மூலமாகவோ மெதுவாக அந்த இடத்தை மட்டும் தட்டி பிளெண்ட் செய்யவும். கன்னத்து எலும்பிற்குக் கீழே பிளஷ் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற சிறந்த ப்ளஷ் மேக்கப் தேர்வுகள்

1. அகியோ சால் (Aegyo Sal ) - கண்கள் கீழே உள்ள பஃபினஸ்:

கண்களுக்கு கீழே பிளஷ் மற்றும் 'அகியோ சால்'(Aegyo sal) மேக்கப் ஆகியவை கொரிய அழகு சாதன முறைகளில் மிகவும் பிரபலமானவை. இவை நம் கண்களை பெரிதாகவும், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் காட்ட உதவும். 'அகியோ சால்' என்பது நாம் சிரிக்கும்பொழுது கண்களுக்குக் கீழே தோன்றும் சிறிய, அழகான 'கொழுப்புப் பகுதி' அல்லது வீக்கம். இதனை மேக்கப் மூலம் பிரகாசமாக மாற்றலாம்.

கண் இமைகளுக்குக் கீழே உள்ள சிறிய மடிப்பில், சருமத்தின் நிறத்தை விட மென்மையான நிறத்தில் ஒரு மெல்லிய கோடு வரையவும். கண்ணின் கீழ் இமைக்கும், வரைந்த நிழல் கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு பிரகாசமான வெள்ளை அல்லது வெளிர் பீஜ்(Beige) நிற ஐ-ஷேடோ அல்லது ஹைலைட்டரைத் தடவவும். இது அந்தப் பகுதியை உயர்த்திக்காட்டும்.

ப்ளஷ் மேக்கப்
ப்ளஷ் மேக்கப்AI image

2. பீச் பிளஷ்(Peach Blush):

இது இந்திய மற்றும் சற்று வெதுவெதுப்பான (warm) ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு மிகச்சரியாகப் பொருந்தும். கண்களுக்கு கீழே, கன்னங்களின் மேல் பகுதியில் லேசாக டாட் (dot) வைக்கவும். இதனை மூக்கின் நுனி வரை லேசாக இழுத்து ப்ளெண்ட் செய்யலாம். இது ஒரு நேச்சுரல் சன்- கிஸ்ட் (Sun kissed) லுக்கைத் தரும். அத்துடன் முகத்திற்கு இயற்கையான ஒரு பளபளப்பையும் கொடுக்கும்.

3. கூல்-டோன் பிளஷ்:

வெளிர் அல்லது ஃபேர் சருமம் உள்ளவர்கள் மற்றும் லைட் பிங்க், லாவெண்டர் போன்ற நிறங்களை விரும்புவர் களுக்கு இது ஏற்றது. கண்களுக்கு கீழே அண்டர்-ஐ பகுதியில் இந்த பிளஷை வைப்பதன் மூலம் கண்கள் பிரகாசமாகவும் முகம் மிகவும் பிரஷ்ஷாகவும் தோற்றமளிக்கும்.

4. கிரீமி மற்றும் லிக்விட் டெக்ஸ்டர்:

கொரிய அழகுசாதனப் பொருட்களில் க்ரீமி மற்றும் லிக்விட் அமைப்புகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவை சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு, நீர்ச்சத்து மற்றும் கண்ணாடி போன்ற தோற்றத்தைக் கொடுக்க உதவுகின்றன. இந்த க்ரீம் மற்றும் லிக்விட் பொருட்களை சருமத்தில் தேய்க்கக்கூடாது. விரல்கள் அல்லது மேக்கப் ஸ்பான்ச் மூலம் மெதுவாகத்தட்டி சருமத்தில் பொருத்த வேண்டும்.

5. ஒம்பிரே பிளஷ் (Ombre Blush ) நுட்பம்:

ஒம்பிரே பிளஷ் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களை கன்னங்களில் ஒரே சீராக கலக்கும் ஒரு மேக்கப் முறையாகும். இது கன்னங்களுக்கு கூடுதல் பிரகாசத்தையும், எடுப்பான தோற்றத்தையும் தரும். ஒரே நிறக் குடும்பத்தைச் சேர்ந்த உதாரணத்திற்கு வெளிர் பிங்க் மற்றும் அடர் மெஜந்தா இரண்டு பிளஷ்களை தேர்ந்தெடுத்து, அடர் நிற பிளஷை கன்னங்களின் மேற்பகுதியில், காதுக்கு அருகில் மெதுவாக அப்ளை செய்து வெளிர் நிற பிளஷை கன்னங்களின் மையப் பகுதியில் அப்ளை செய்யவும்.

இரண்டு நிறங்களும் ஒன்றுடன் ஒன்று இணையும்படி (எந்த ஒரு கோடுகளும் தெரியாதவாறு) ஒரு பவுடர் பிரஷ் அல்லது பியூட்டி ஸ்பான்ச் கொண்டு வட்ட வடிவில் மென்மையாக பிளெண்ட் செய்யவும்.

இதையும் படியுங்கள்:
தினமும் அழகைக் கெடுக்கும் எண்ணெய் பசையா? வெற்றிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!
ப்ளஷ் மேக்கப்

6. மேலும் சில முக்கிய குறிப்புகள்:

கன்னத்தின் நடுப்பகுதியில் கண்களுக்கு மிக அருகில் பிளஷை வைப்பது கொரியன் ஸ்டைல். இது முகம் பார்ப்பதற்கு சிறியதாக, க்யூட்டாகத் தெரிய உதவும்.

நீங்கள் க்ரீம் அல்லது லிக்விட் பிளஷ் பயன் படுத்துகிறீர்கள் என்றால் விரல்களால் அல்லது பஃப் (Puff )மூலம் மென்மையாகத் தட்டி ப்ளெண்ட் செய்யவேண்டும். பிளஷ் போடுவதற்கு முன், டார்க் சர்க்கிள்ஸ் இல்லாமல் கன்சீலர் போட்டு அண்டர்-ஐப் பகுதியை க்ளீனாக வைத்துக்கொள்ளவும்.

நீங்கள் சோர்வான கண்கள் மற்றும் முதிர்ந்த தோற்றத்தில் இருந்து விடுபட்டு, வெறும் ஐந்தே நிமிடங்களில் கண்ணாடியைப் போன்ற பளபளப்பான, க்யூட்டான கொரியன் அழகைப் பெற முடியும். உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு சரியான ப்ளஷ் தேர்வையும், அதை அப்ளை செய்யும் முறையையும் அறிந்துகொள்வதன் மூலம் எந்தவொரு விசேஷத்திலும் தனித்துவமான இளமைப் பொலிவோடு ஜொலிப்பீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com