தமிழ்நாட்டில் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் வந்தால் போதும் பெண்கள் பட்டுச் சேலையைத்தான் ஆசை தீர அணிவார்கள். எத்தனை ட்ரெண்டிங் சேலை மற்றும் ஆடைகள் வந்தாலும் சரி , அதனை சாதாரண நாட்களில் எவ்வளவு வேண்டுமானாலும் அணிந்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு திருமண நிகழ்வோ அல்லது கோவில் விழாக்களோ வந்தால் நமது மனம் முதலில் செல்லும் ஆடை பட்டு புடவைதான். அப்படியிருக்க பட்டுப் புடவை மட்டும் ட்ரெண்டிற்கேற்ப மாறாத என்ன? புடவை அப்படியே இருந்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜாக்கெட் அணிந்தாலே போதும், அழகான லுக் தானாகவே வந்துவிடும். அதுவும் பாரம்பரியத்தோடு. அந்த வகையில் பட்டுப்புடவைக்கான ட்ரெண்டிங் ஜாக்கெட்டுகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
Contrast Designer Blouse
சிலருக்கு அவர்களுடைய அம்மாவின் பட்டு புடவை என்றால் உணர்வுப்பூர்வமான ஒன்றாக இருக்கும். அம்மாவின் புடவை எவ்வளவு பழைய வடிவமைப்பாக இருந்தாலும் சரி இனி கவலையே இல்லை. அந்த புடவைகளுக்கு ஏற்ற ஒரு நிறத்தில் ஜாக்கெட் துணி வாங்கி, அதனை கழுத்தோடு ஒட்டி மற்றும் பாதி அளவு கை வைத்து தைக்கலாம். இது பழைய வடிவமைப்பின் சுழற்சி முறையே. ஆனாலும் இப்போது ட்ரெண்டாகி வருகிறது என்றே கூற வேண்டும்.
காஞ்சிவரம் புடவை மற்றும் எம்பிராய்ட் ஜாக்கெட்
இது தென்னிந்தியா முழுவதும் திருமண நிகழ்வுகளில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒன்று. இந்த புடவைக்கு பெரும்பாலும் புடவையுடன் கொடுக்கும் ஜாக்கெட் துணி அவ்வளவாக சிலருக்கு பிடிப்பதில்லை. இருந்தும் வேறு வழியில்லாமல் அணிகிறார்கள். இந்த வகையான புடவைக்கு அதே நிறத்தில் ஜாக்கெட் அணிந்தால் தான் நன்றாக இருக்கும். ஆகையால் அதே நிறத்தில் ஜாக்கெட் துணி வாங்கி மிக குறைவான அல்லது மிக அதிகமான எம்ப்ராயிட் பயன்படுத்தி அணிவது அழகாக இருக்கும்.
Pot neck kundan embroided
இந்த வகையான எம்ப்ராய்ட் டிசைன் பனராஸ் , உப்பதா ஆகிய புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும். புடவையே எடை அதிகமாக இருப்பது போல் உணர்பவர்கள் ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் பின் பகுதியில் மட்டும் எம்ப்ராய்ட் வைத்துக்கொள்ளலாம். மற்றும் பின்பக்கம் ஒரு வட்ட வடிவம் கொண்ட இடைவெளி விட்டு ஒரு வேலைப்பாடுமிக்க தோல்வார் தொங்கவிடுவது மிகவும் அழகாக இருக்கும்.
Pattu border work
இது 90 களில் மிகவும் பிரபலமாக இருந்த வடிவமைப்பு. இப்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. இது மைசூர் புடவைக்கு ஏற்ற ஜாக்கெட். இதன் கழுத்துப் பகுதியிலும் அரைக்கையின் கீழ் பகுதியிலும் பெரிய பார்டர் வைத்து தைப்பது அழகாக இருக்கும்.
Banaras Blouse
இந்த வகையான ஜாக்கெட் காட்டன் புடவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். பனாரஸ் ஜாக்கெட்டை முக்கால் கை அளவு மற்றும் பானை வடிவம் கொண்ட கழுத்து வைத்து தைத்தால் மிகவும் அழகாக இருக்கும். இதற்கு பெரிய ஜிமிக்கி மட்டும் போட்டுக்கொண்டாலே ஒரு அருமையான அவுட் லுக்கைத் தரும். மேலும் இந்த லுக் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமில்லாமல் பார்டீஸ் போன்றவற்றிற்கும் ஏற்றதாக இருக்கும்.
இந்த அனைத்து ஜாக்கெட் டிசைன்களுமே 90 களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு பிறகு பழைய மாடல் என்று நிராகரிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இவையனைத்தும் இப்போது ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.