பாரம்பரியமும் மாடர்ன் லுக்கும் வேணுமா? இந்த 5 சேலைகளில் ஒன்றை தேர்வு செய்யுங்க!

reception sarees
reception sarees
Updated on

திருமண அழைப்பிதழ் வீட்டுக்கு வந்தவுடன் முதலில் நம் மனதில் தோன்றுவது என்ன தெரியுமா? “இந்த கல்யாணத்துக்கு என்ன சேலை கட்டலாம்?” என்பதுதான்! திருமணம் என்பது வெறும் நிகழ்ச்சி மட்டும் இல்லை. உறவுகளை சந்திக்கும் தருணம், புகைப்படங்கள் எடுக்கும் நினைவுகள், சிரிப்பு, இசை, சாப்பாடு, எல்லாமே சேர்ந்த ஒரு கொண்டாட்டம். அதனால் அந்த நாளில் நாமும் அழகாகவும் நம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள் நம் மனதில் தோன்றும்.

இன்றைய நாட்களில் நாம் உடுத்தும் உடைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கவேண்டும். அதேசமயம் கனமாக இல்லாமல் ரிச்சாக தோன்றும் வகையில் இருக்கவேண்டும் என நினைக்கிறோம்.

எனவேதான் இந்த 2026-ல் திருமண ஃபேஷனில் ஒரு பெரிய மாற்றம் என்னவென்றால், “அழகு மட்டும் போதாது, வசதியும் வேண்டும்” என்பதாக மாறி வருகிறது அணியும்போது கனமாக இல்லாமல் ரிச்சாக தோன்றும் சேலைகளே இப்போது அதிக டிரெண்டில் உள்ளன.

அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

பாரம்பரியத்தின் அழகு – காஞ்சிபுரம் பட்டு

திருமண நிகழ்ச்சிக்கு எப்போதும் ராஜராணி லுக் தருவது காஞ்சிபுரம் பட்டு சேலை. தூயபட்டு, ஜரி வேலை, அடர் நிறங்கள், இவை சேரும்போது அந்த சேலைக்கு தனி பெருமை கிடைக்கும்.

ஒவ்வொரு வருடத்திலும் சில நிறங்கள் டிரெண்டில் இருக்கும். அதுபோல இந்த ஆண்டு அதிகம் விரும்பப்படும் நிறங்கள்:

அடர் மகெண்டா

ராயல் ப்ளூ

தங்க மஞ்சள்

இந்த மாதிரி சேலைகளுக்கு அதிக நகை தேவையில்லை. ஒரு அழகான ஜிமிக்கி, சின்ன நெக்லஸ் போதும்.

இதையும் படியுங்கள்:
மெஹந்தி முதல் ரிசப்ஷன் வரை... அசத்தலான ஆடைத் தேர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!
reception sarees

Banarasi – ரிச் மற்றும் கிளாசி

மாலை நேர ரிசெப்ஷனுக்கு Banarasi Silk Saree ஒரு சூப்பர் தேர்வு. அதில் இருக்கும் நுணுக்கமான ஜரி வேலை, விளக்குகளில் இன்னும் பிரகாசமாக தெரியும். குறிப்பாக வைன், எமரால்ட் கிரீன், நேவி ப்ளூ போன்ற நிறங்களில் இந்த சேலைகள் மிகவும் எலிகன்டாக இருக்கும்.

பைதானி மற்றும் பட்டோலா சேலைகள் Paithani &Patola sarees

கலைநயம் விரும்புபவர்களுக்கு எல்லாரும் ஒரே மாதிரி சேலை கட்டும் காலம் போய்விட்டது. இப்போது தனித்துவம் தேடும் பெண்கள் Paithani மற்றும் Patola சேலைகளை அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

Paithani சேலையில் மயில் வடிவங்கள், வண்ண கரைகள் மிகவும் அழகாக இருக்கும். Patola சேலையின் ஜியோமெட்ரிக் இக்கட் டிசைன்கள் மாடர்ன் லுக்கை தரும். இவை பாரம்பரியத்தையும் ஃபேஷனையும் சேர்த்து காட்டும்.

ஆர்கன்சா சேலைகள் Organza Saree.

இந்த ஆண்டு இளம் பெண்களிடையே மிகப் பெரிய ஹிட் Organza Saree. லைட்வெயிட், மென்மையான தோற்றம், புகைப்படங்களில் அழகாக விழும் ஃபால்—இதுதான் இதன் ஸ்பெஷல்.

பிரபலமான டிசைன்கள்:

பெரிய மலர் பிரிண்ட்கள்

மென்மையான எம்பிராய்டரி

பாஸ்டல் ஷேட்கள்

மிண்ட் கிரீன், பிளஷ் பிங்க், லைலக் போன்ற நிறங்கள் பகல் நேர திருமணங்களுக்கு செம்மையாக இருக்கும்.

ஜார்ஜெட் & சிஃபான் சேலைகள் Georgette & Chiffon

இப்பொழுதெல்லாம் ஆடல் பாடல் இல்லாத திருமணமா ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சிகள்தான் அதற்கு கலந்துகொள்ளும்போது நீண்ட நேரம் பட்டு சேலை அணிவது சிரமம் அந்த நேரத்தில் கட்ட ஏற்ற சேலைகள்தான் ஜார்ஜெட் & சிஃபான் சேலைகள் Georgette & Chiffon வகைகள் இவை எடை குறைவாக இருக்கும். நடக்கவும் எளிது, ஆடவும் வசதி.

கிளாமர் லுக் வேண்டுமா?

ரிசெப்ஷனில் எல்லோரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால் Net Saree முயற்சி செய்யலாம். சீக்வின் வேலை, மிரர் வொர்க், ரைன் ஸ்டோன்ஸ் ஆகியவை இரவு வெளிச்சத்தில் பிரகாசமாக தெரியும்.

சேலைக்கு ஏற்ற ஸ்டைலிங்

கனமான சேலைக்கு எளிய நகைகள் போதும். எளிய சேலைக்கு பெரிய காதணிகள் அழகாக இருக்கும். Organza அல்லது Net சேலைகளுக்கு ஹால்டர் நெக் அல்லது கேப் ஸ்டைல் பிளவுஸ் டிரெண்டில் உள்ளது.

ஹீல்ஸ் அணிய விருப்பமில்லையெனில் வெட்ஜ் சாண்டல்ஸ் மிகவும் வசதியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ரிசப்ஷனில் கெத்து காட்டலாம்! மணமகள்களை மயக்கும் டாப் 5 லேட்டஸ்ட் சேலை வகைகள்!
reception sarees

மொத்தத்தில்,

2026 திருமண சீசனில் டிரெண்ட் என்னவென்றால், “அழகாக இருக்கவேண்டும், அதேநேரத்தில் நாமாகவே இருக்கவேண்டும்” என்பதுதான்.

பாரம்பரிய பட்டு சேலையாக இருந்தாலும் சரி, லைட்வெயிட் ஆர்கன்சா இருந்தாலும் சரி… நீங்கள் நம்பிக்கையுடன் அணிந்தால் அதுவே சிறந்த ஃபேஷன். இந்த திருமண சீசனில் ஸ்டைலாகவும், எலிகன்டாகவும், அனைவரின் பார்வையையும் கவரும் வகையிலும் ஜொலியுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com