மகாபாரதத்தில் திரௌபதி இந்த அரிசி கிச்சடியை பாண்டவர்களுக்கு செய்து கொடுத்திருப்பார். அதேபோல கிருஷ்ணரும் சுதாமாவுடன் இந்த உணவை சாப்பிட்டதாகவும் வரலாறு உண்டு. அத்தகைய பெருமை வாய்ந்த அரிசி கிச்சடியை எப்படி சுலபமாக செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
அரிசி கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி-1கப்.
துவரம் பருப்பு-3 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
எண்ணெய்-1 குழிகரண்டி.
பட்டை-1 துண்டு.
கிராம்பு-1
சோம்பு-1/2 தேக்கரண்டி.
ஏலக்காய்-3
கருவேப்பிலை-சிறிது.
பூண்டு-10
வெங்காயம்-1
தக்காளி-1
உருளை-1
கேரட்-1
பட்டாணி-1 கப்.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
நெய்- தேவையான அளவு.
முந்திரி-10
அரிசி கிச்சடி செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் 1 கப் அரிசி, 3 தேக்கரண்டி துவரம் பருப்பு, 1 தேக்கரண்டி ஜீரகம், 1 தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்றாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது பாத்திரத்தில் ஒரு குழி கரண்டி எண்ணெய், ஏலக்காய் 3, கிராம்பு 1, பட்டை 1, சோம்பு ½ தேக்கரண்டி, கருவேப்பிலை கொஞ்சம், 10 பல் பூண்டு, பெரிய வெங்காயம் 1 போட்டு வதக்கியதும் உருளை 1, கேரட் 1, பட்டாணி 1 கப் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது தக்காளி 1 சேர்த்து நன்றாக வெந்ததும் 3 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்திருந்த அரிசியை கொட்டி கிண்டவும். பிறகு இதை மூடி வைத்து ஒரு 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கலைந்து விட்டால் சுவையான அரிசி கிச்சடி தயார். நீங்களும் வீட்டிலே செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
பால் பாசந்தி செய்ய தேவையான பொருட்கள்:
கிரீம் பால்-2 லிட்டர்.
குங்குமப்பூ- சிறிதளவு.
சக்கரை-200 கிராம்.
ஏலக்காய்-1/2 தேக்கரண்டி.
பாதாம், பிஸ்தா- தேவையான அளவு.
பால் பாசந்தி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் கிரீம் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பால் நன்றாக கொதித்து பொங்கியதும் சுண்ட காய்ச்சவும். இப்போது குங்குமப்பூவை எடுத்து அதை ஒரு பவுலில் பாலோடு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து அதை இத்துடன் சேர்க்கவும். பாலில் விழும் ஆடைகளை அப்படியே ஓரமாக ஒதுக்கி விடவும்.
இப்போது 200 கிராம் சக்கரை சேர்த்து நன்றாக சுண்ட விடவும். கடைசியாக ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி, பாதாம், பிஸ்தா நறுக்கி வைத்ததை சேர்த்து கிண்டி விட்டி பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். இப்போது வேற லெவல் டேஸ்டில் சுவையான பால் பாசந்தி தயார். நீங்களும் வீட்டில் செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.