சமீப காலமாக பல திரைப்பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் ‘பிளாக் வாட்டர்’ என்று சொல்லப்படும் கருப்பு தண்ணீரை பருகி வருவதை பார்த்திருப்போம். இதனால் என்ன பயன் கிடைக்கிறது? எதனால் இந்த கருப்பு தண்ணீர் மிகவும் பிரபலமடைந்தது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிளாக் வாட்டர் என்பது Alkaline solution ஆகும். இது பார்ப்பதற்கு கருப்பு நிறத்திலும், அதிக ஊட்டச்சத்துகளையும் கொண்டிருக்கிறது. சாதாரண தண்ணீரை காட்டிலும் பிளாக் வாட்டரில் இயற்கையாகவே மண், செடி மற்றும் தண்ணீரில் இருக்கக்கூடிய Fulvic acid உள்ளது. இதில் மினரல், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை ஆரோக்கியத்துடன், உடலை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. Fulvic acid ஐ தண்ணீரில் சேர்க்கும்போது தண்ணீரின் நிறம் கருமையாக மாறுகிறது. இதனாலேயே இந்த தண்ணீரை ‘பிளாக் வாட்டர்’ என்று அழைக்கிறார்கள்.
சமூக வளைத்தளங்களில் இந்த பிளாக் வாட்டர் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இதை உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பயன்படுத்தலாம். சர்க்கரை கலந்த குளிர்பானங்களை தவிர்த்து இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. சர்க்கரை கலந்த பானங்களுக்கு பதில் இது மாற்றாக இருக்கிறது. பிளாக் வாட்டர் சர்க்கரை சேர்க்கப்படாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், நம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகப்படுத்துவதால், ஜீரணம் மட்டும் மேம்படுவதில்லாமல் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்தவுடன் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். அதை சரி செய்வதற்காகத்தான் உடற்பயிற்சிக்கு பிறகு அதிக தண்ணீர் அருந்த சொல்கிறார்கள். இந்த பிளாக் வாட்டர் உடலில் ஏற்படும் நீரிழப்பை சரிசெய்ய உதவும்.
பிளாக் வாட்டர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. தண்ணீரில் உள்ள Alkaline உடலில் கேஸ்ட்ரிக் ஆசிட்டை உற்பத்தி செய்வதால், பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து உடலில் நச்சு நீக்கம் செய்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் விரைவில் வயதாவதை தடுக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களால் ஏற்படும் பிரச்னைகளை போக்கி உடல் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாக பயன்படுகிறது. இது HbA1c மற்றும் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கிறது.