இயற்கையான முறையில் அழகைக் கூட்டும் இலைகள்!

சருமம் மிருதுவாக...
சருமம் மிருதுவாக...
Published on

ன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தும் இலைகளுடன் இதர பொருட்களை வைத்தே சில அழகு குறிப்புகளை  எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காண்போம். 

ஸ்நானப் பவுடர் தயாரிக்கும்போது சிறிது குப்பைமேனி இலைகளையும் காயவைத்து இடித்துச் சேர்த்துக் கொள்ளவும்.   எந்தவித தோல் வியாதிகளும் நெருங்காது. 

நான்கு பல் வெள்ளைப் பூண்டை எடுத்து வெற்றிலையுடன் சேர்த்து கசக்கி பிழிந்து அந்த சாற்றை தடவினால் தேமல் மறையும். சருமம் மிருதுவாக பளபளப்புடன் திகழும். 

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சுடு நீரில் சுத்தமான வேப்பிலை போட்டு ஆவி பிடித்தால் சரும துவாரங்கள் திறந்து உள்ளே உள்ள அழுக்குகள் வெளியேறும். பின்னர் துவாரங்கள் மறுபடியும் மூட குளிர்ந்த நீரால் முகத்தில் பளீரென்று அடித்து கழுவ வேண்டும். 

புதினாவை அரைத்து முகத்தில் பூசி முக்கால் பதம் காய்ந்ததும் கழுவி விட வேண்டும் .எந்த பேக் போட்டாலும் 25 நிமிடங்களுக்கு மேல் காய விட வேண்டிய அவசியம் இல்லை .ஏனெனில் அதிகம் காய விடும்போது தேவைக்கு அதிகமான ஈரப்பசையையும் சேர்த்து உறிஞ்சி விடுவதால் பேக்கின் முழு பலனும் கிடைப்பதில்லை.

முட்டைக்கோஸின் வெளிப்புற இலைகளை நறுக்கி மிக்ஸியில் இட்டு அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஈஸ்ட் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி வர சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்ட கருமை நிறம் ஓரிரண்டு நாட்களில் மறைந்து போய் விடும். 

மருதாணி இடும்பொழுது மருதாணி விழுதுடன் சிறிது கோந்து கலந்து இட்டுக் கொண்டால் உதிராமல் இருக்கும். 

வாரம் ஒரு முறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறிய பின் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வந்தால் எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்று விடும். இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கரு கருவென முடி வளரவும் செய்யும். 

beauty tips...
beauty tips...

பருத்தி இலைகளை பறித்து அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் சீயக்காய் தூள் கலந்து குளித்து வர கூந்தல் பளபளக்கும். 

தினசரி ஒரு வேலை சூடான சாப்பாடு, இடியாப்பம்  கொழுக்கட்டை போன்றவற்றை வாழை இலையில் வைத்து சாப்பிடலாம் .நல்ல பச்சையம் கிடைக்கும். அதிலிருந்து பல்வேறு சத்துக்களை உடல் எடுத்துக் கொண்டு உடம்பை தேஜசுடன் வைக்கும். 

உணவில் அதிக அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேகமாக நரைப்பது கட்டுப்படும். 

மருதாணி இட்டு காய்ந்த பிறகு அதன் மேல் சிறிதளவு சர்க்கரை கலந்த எலுமிச்சை சாற்றை ஊற்றி ஈரப்படுத்தி பின்னர் காயவிட்டால் கை களுக்கு அழகான அரக்கு சிவப்பு நிறம் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!
சருமம் மிருதுவாக...

தண்ணீரில் தேயிலையை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவிட்டு அது ஜில்லென்று ஆன பிறகு முகம், (கூந்தலின் வேர்க்கால் வரை) தடவி அரை மணி நேரம் விட்டு அலசினால் முகம், கூந்தல் பளபளவென்று ஆரோக்கியமாக இருக்கும். 

இதுபோல் சிறுசிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி இலைகளின் மூலமும் மேனி அழகைப் பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com