பீட்ரூட் கிரிஸ்பி போண்டா
தேவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் - 1 கப், துவரம் பருப்பு – 1 கப் (ஒரு மணி நேரம் ஊறியது), தேங்காய்த் துருவல் - ½ கப், சிவப்பு மிளகாய் – 4, இஞ்சி - 1 துண்டு, சோம்பு - 1 டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு. அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க.
செய்முறை: பீட்ரூட், பகுப்பு. இஞ்சி, உப்பு, காரம் ஆகியவற்றை கரகரப்பாக அரைக்கவும். மாவில் தேங்காய்த் துருவல், அரிசி மாவு, சோம்பு, கறிவேப்பிலை கலந்து உருட்டி போண்டா போல் எண்ணெயில் பொரிக்கவும்.
- லக்ஷ்மி, மதுரை
ரவா பட்டன்ஸ்
தேவை: ரவை - 1 கப், மைதா – ¼ கப், துருவிய தேங்காய் – ½ கப், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 8, எள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், காரப் பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: ஆவியில் வெந்த மைதாவுடன், ரவையைச் சேர்க்கவும். இஞ்சி, மிளகாய், தேங்காய் சேர்த்து விழுதை உப்பு, காரம், வெண்ணெயுடன் மைதா - ரவை கலவையில் சேர்க்கவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி கட்டை விரலால் நடுவில் அழுத்தி பேப்பரில் சிறிது நேரம் போடவும். காய்ந்ததும் எண்ணெயில் பொரிக்கவும்.
- நெல்லை வள்ளி ராமகிருஷ்ணன், சென்னை
வாழைப்பூ தூள் பக்கோடா
தேவை: நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூ 1 கப் (நறுக்கியது), அரிசி மாவு - 1 கப், கடலை மாவு - ¼ கப், நெய் 1 கரண்டி, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம். எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: கொதிக்கும் நீரில் பூவைப் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். உருக்கிய நெய்யில் உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து, நுரை பொங்க அடித்து, வாழைப்பூ, மாவுகள் சேர்த்து, தேவைப்பட்டால் நீர் சேர்த்துப் பிசிறி விடவும். காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும்.
- லக்ஷ்மி சுப்ரமணியம், மதுரை